பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


子安。 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

விளங்கு புகழ்க் கபிலன்' (புறம். 53) எனவும், நிலை கிளர் கூட னிளெரி யூட்டிய, பலர் புகழ் பத்தினி' (சிலப்பதிகாரம் பதிகம்

35-36) எனவும் வரும். இவ்வாறே ஏனையவற்றிற்கும் ஒட்டிக் கொள்க.

இனி எல்லாமாவன. ஒளியும் அளியுங் காய்தலும் அன்பும் அழுக்காறும் பொறையும் நிறையும் அறிவும் முதலியனவும் பிறவுமாம்,

1. ஒளியாவது : வெள்ளைமையின்மை.

2. அளியாவது : அன்புகாரணத்தால் தோன்றும் அருள்.

3. காய்தலாவது வெகுளி.

4. அன்பாவது: மனைவியர்கண்ணுந் தாய்தந்தை புதல்வர் முதலிய சுற்றத்தின் கண்ணும் மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம்.

5. அழுக்காறாவது : பிறர் செல்வ முதலியவற்றைப் பொறாமை.

6. பொறையாவது ; பிறர் செய்த தீங்கைப் பொறுத்தல்.

7. நிறையாவது மறை பிற ரறியாமல் ஒழுகுதல்.

8. அறிவாவது : நல்லதனலனுத் தீயதன்றீமையும் உள் ள வாறுணர்தல். இவை கண்டிலமென்று கடியப்படா கொள்ளும்

பொருளென்றார். இவை ஆசிரியனாணையன்றென்பது மேற் சூத்திரத்தாற் கூறுகின்றான். (இக)

ஆய்வுரை :

இது, மேல் முதல் கரு உரியெனப்பொருளைப்பாகுபடுத்

துணர்த்திய ஆசிரியர் அவற்றுள் உண்மை மாத்திரமுணர்த்திப்

பிழம்புணர்த்தப்படாதன வாகிய பொருள்கள் சிலவற்றை த்

தொகுத்துணர்த்துகின்றார்.

(இ~ள்) ஒப்பு, உரு, வெறுப்பு என வும், கற்பு, ஏர், எழில்