பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

琏G- தொல்காப்பியம் பொருளதிகாரம்

ஆய்வுரை: இது தலைமகளது உயிரினுஞ் சிறந்த நாணின் சிறப்புணர்த்துகின்றது.

(இ-ள்) தலைவி தலைவனை யடையப் பெறாமையால் ஆனது. உடம்பும் உயிரும் மெலிந்தநிலையிலும் உடம்பு முதலிய அவற்றைத் தன்னின் வேறாக எண்ணி 'இவை என்ன துன்பு முற்றன’ என அவற்றின் வாட்டத்திற்கு இரங்கிக் கூறுவதன்றித தலைமகன் உள்ள இடத்துத் தானே சேர்தல் என்பது உயிரி னுளு சிறந்த நாணினளாகிய தலைவிக்கு இலலை. எ-று

என்னுற்றன. கொல்’ இவையெனின் அல்லது' என்பதற்கு இவை என்ன வருத்தமுற்றன என வருத்தமில்லது போலக கூறுவ தன்றி' எனப்பொருள் கொள்ளினும் அமையும். கிழவோற்சேர்தல் தலைவனை அவன் உள்ள இடத்திற் சென்று சேர்தல்

ఢీ . ஒருசிறை நெஞ்சோ டுசாவுங் காலை

உரிய தாகலும் உண்டென மொழிப.

இளம் பூரணம் :

என்-எனின். மேல தற்கோர் புறனடை உணர்த்திற்று." (இ- ள் தனி ந்து நெஞ்சோடு உசாவுங்காலத்துக் கிழவோ ற் சேர்தல் உரியதாகலும் உண்டு என்றவாறு, உம்மை எச்சவும் மையாகலால் தோழியோடு உசாதலுக் கொள்க.

'கோடீர் இலங்குவளை நெகிழ நாடொறும் பாடில கவிழுங் கண்ணொடு புலம்பி ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே - எழுவினி வாழிய நெஞ்சே." (குறுந் கச)

என வரும்.

1. “கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை' என மேலைச் சூத்திரத்து விதித்த தொல்காப்பியனார், அவ்விதிக்குப் புறனாகக் கிழவோற் சேர்தல் வேண் டும்: என்னும் எண்ணமும் "தலைமகள் கெஞ்சத்திலே தோன்றுதல் உண்டு என இச்சூத்திரத்திற் கூறினமையால் இது, மேலதற்கோர் புறனடையுணர்த்திற்று' எனக் கருத்துரை வரைந்தார் இளம் பூரன்னர்.

2. தனித்து-தனிமையிலிருந்து, சிறை-பக்கம். ஒருசிறை-ஒருபக்கம்., ஒரு பக்கத்துத் தனித்திருத்தலாகிய தனிமை நிலையினைச் சுட்டி கின்றது.