பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் لاتي ين

ஆய்வுரை: இது, மேலதற்கோர் புறனடை.

(இ-ள்) தலைவி தன்னெஞ்சத்துடன் தனித்து வினவுங் காலத்தும் தலைவனையடை தல்வே ண்டும் என்ற உணர்வு அவட்கு உரியதாதலும் உண்டென்று கூறுவர் ஆசிரியர் . எ-று

நெஞ்சமோடு ஒரு சிறை உசாவுங்காலை (கிழவோர் சேர் தல) உரியதாகலும் உண்டு என இயையும். உரியதாக ல என் னும் பயனிலைக்கு எழுவாயாக முற் சூத்திரத்திலுள்ள கிழவோர் சேர்தல்’ என்பது அதிகாரத்தால் வந்தியைந்தது. நெளுசமோடு ஒருசிறையுசாவுதலாவது, ஒரு பக்கத்துத் தனித்திருந்து தனது நெஞ்சத்தினை முன்னிலைப்படுத்து வினவி ஆராய்தல உரிய தாகலும் என்புழி உம்மை இழிவு சிறப்பாதலின் உரியதாகா மையே உயிரினுளு சிறந்த நாணுடைமைக் கு அழகாம் என்பது கருத்து.

ல், தன்வயிற் கரத்தலும் அவள்வயின் வேட்டலும்

அன்ன இடங்கள் அல்வழி யெல்லாம் மடனொடு நிற்றல் கடனென மொழிப

இளம் பூரணம் :

என்-எனில் தலைமகட் கின்றியமையாத மடன் அழியும். இடம் உணர்த்துதல் துதலிற்று.

இ.ஸ் ) தலைமகன் தனதொழுக்கந் தலைமகள் மாட்டுக் கரந்து உணர்த்தும் வழியும் தலைமகள் மாட்டுப் புணர்ச்சி வேட் கை தோற்றியவழியு மாகிய அத் தன்மைப்பட்ட விடங்களல்லாத வழியெல்லாம் தலைமகள் மடனொடு நிற்றல் கடன் என்று

சொல்லுவர் என்றவாறு.

தன் வயிற் கரந் தவழி மடனழி ப நின்றதற்குச் செய்யுள்:

முத்தேர் முறுவலாய் நம் வலைப் பட்டதோர் புத்தியானை வந்தது; காண் பாண் யான் றங்கினேன்’’.

என்ற வழி. அதற்குடம் படாது,

1. இக் நூற்பா தலைமகளைப் பற்றிய இயல்புரைப்பதா தலின் இதன் கண் "தன்வயின் என் புழித் 'தன்' என்றது தலைமகளையெனவும், எனவே இதனை யடுத்துவரும்தொடர், அவன் வயின், என்றிருத்தலே பொருத்தம் என வுங்கொள் ஆளுதலே இந் நூற்பாவமைதிக்கு ஒத்ததாகும். கச்சினார்க்கினியர் உரையில் "அவுன் வயின் வேட்டிலும் என்ற பாடமே காணப்படுதலின் 'அவன் வயின் வேட்டலும்’

என்பதே உண்மையான பாடமாகும்.