பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா உக ;

(இ.கள்) காப்பினுள் - காவன் மிகுதியால் தலைவிக்கு வருத்தம் நிகழ்ந்தவிடத்து: அன்பே அறனே இன்பம் நாணொடு துறந்த ஒழுக்கம்-தலைவன்கண் நிகழும் அன்புங் குடிப்பிறந்தோர் ஒழுகும் அறனுந் தமக்கின்றியமையா இன்பமும் நானும் அகன்ற ஒழுகலாறு; பழித்தன்று ஆகலின் ஒன்றும்-பழியுடைத்தன்று ஆகையினலே புலனெறிவழக்குப் பொருந்தும்: வேண்டா. அவற்றை வழுவாமென்று களையல் வேண்டா (எ-று)

எனவே, பொருளென மொழிதல் தலைவிக்கும் உடன்பா. டென்று அமைத்தாராயிற்று, (്ല.ക്)

ஆய்வுரை : இது களவொழுக்கத்தின் கண் தலைவிக்கு உரியதோர் இயல்புணர்த்துகின்றது.

(இ-ள்) இற்செறித்துக காக்குங் க | வ ல் மிகுதியான நிலைமைக்க ண் தலைவன் பால் தான் கொண்டுள்ள அன்பும் அன்பின் வழிப்பட்ட மனையறமும், மனையறத்தின் கண் ஒழு கி நுகர் தற்குரிய இன்பமும் பெண்ணியல்பாகிய நாணமும் ஆகிய இவற்றிற் கருத்தின்றி அடங்கியொழுகும் ஒழுக்கம் தலைவிக்குப்

1. ஒன்றும் என்பதனை ச் செய்யும் என்னும் முற்றாகக்கொண்டு கா ப் பினுள் அன்பேயறனேயின்ப நானொடு துறந்த ஒழுக்கம், ஒன்றும் -(புலனெறி வழக்கிற்குப்) பொருந்தும் எனப்பொருள் வரைக்தார் கச்சினார்க்கினியர். ஒன்று தல்-பொருந்துதல். வேண்டா- என்பதற்கு 'அவற்றை வழுவா மென்று களையல் வேண்டா என வரும் கச்சினார்க்கினியருரையில் அவற்றை யென்றது, அன்பே ......கா னொடு துறந்த வொழுக்கத்தினை. இங்ங்னம் இச்சூத்திரத்தினை இரு தொடராக்கி ஒன்றும் என்பதனைச் செய்யுமென்னும் முற்றாக்காது, காப்பினுன் அன்பே.காணொடு துறந்தவொழுக்கம் பழித்தன்றா கலின் காப்பினுள் அன்பே அறனே இன்பம் காணொடு இவை ஒன்றும் வேண்டா என ஒருதொடராகக் கொண்டு பொருள் கூறலும் பொருத்தமுடையதேயாகும். இளம்பூரணருரையில் இச் சூத்திரமும் இதன் பொழிப்புரையும் சிதைந்துபோனாலும்,

'இதனாற்சொல்லியது, அன்பையும் அறத்தையும் இன் பத்தையும் கினைத்து வருந்தப்பெறான் னவும் காணத்தைத் கைவிட்டுத் தமர் கொடுக்குமாறு முயல வேண்டும் என்பது உம். கூறியவாறாம். இவை ஒருவழித்தனத்தற்கண் கிகழ்வன : என்னும் கருத்துரைப்பகுதி காணப்படுதலின் இந்நூற்பாவும் களவுக்காலத்துத் தலை மகனுக்குரியதோர் இயல்புணர்த்துவதாக இளம்பூரணர் கொண்டுள்ளார் என்பது கன்கு தெளியப்படும்,

ஒருவழித் தணத்தலாவது, களவொழுக்கம் ஒழுகுக் தலைமகன் அலர்தோன்றத் தலைவி இற்செறிக்கப்பட்டுப் புறத்துப்போகாது காக்கப்பட்ட நிலையில் முன்போல் தலைவியைக் கண்டு அளவளாவுதற்கியலாது தன் பதியின் கண் ஓரிடத்தில் பரிக் துறைதலாகும்.