பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா கக கல்க

இஃது இயற்சைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. இதனுள் "தான் .ெ ப. ரி து மகிழாள்' என்புழிச் சிறிது மகிழுமென்றமையசன் இது புகு முகம் புரிதலாயிற்று 'வாணுதல் வியர்ப்ப நாணின னிறைஞ்சி' என்பது பொறிதுதல் வியர்த்தல், “நகைமுகங் கரந்த" என்பது நகுதய மறைத்தல். 'மிகை வெளிப்படாது" என்புழி மேல் அன்ன பிறவு மவற்றொடு சிவனி (தொல், ப்ொருள். 267) என்னும் புறனடையா ற் றழி இயின நகை மொக்குளும் ப்ெற்றாம். "தன்மனஞ் சிதைந்ததை நீயறிந் திலையால் என்பது சிதைவு பிறாக்கின்மை பற்வும் அன்ன. (கக!

பாரதியார்

கருத்து:- மேல் அகத்திணைகளுக்குப் பொதுவாவன: நாலெட்டுங்கூறி, அடுத்து அகத்துள்ளும் க்ளவிற் சிறந்து பயிலும் மெய்ப்பாடுகள் உணர்த்தத் தொடங்கி, அவற்றுள் தலைப்படும் அன்பர் உளத்தெழுங் காதல் முதற் குறிகளை இச்சூத்திரம் கூறுகிறது.

பொருள் :- புகுமுகம் புரிதல் - தலைக் காட்சியில் தலைவன் நோக்கெதிர்வைத் தலைவி விரும்புதல்; பொறிநுதல் வியர்த் தல் - காதலால் நோக்கெதிர்ந்த தலைவி தனக்கியல்பாய அச்ச மும் நானும் அலைக்க அவள் நெற்றியின் பொறி வியர் பொடித்தல். நகுதிய மறைத்தல்-தலைவன் காதற்குறி கண்ட மகிழ்வால் முகிழ்க்குத் தன்முறுவலைப் பிறரறியாது தலைவி யடக்குதல்: சிதைவு பிறர்க்கின்மையொடு - தன்னுள் நிறையழி வைப் புறத்துப் புலன்ாகாது மறைக்கும் தலைவி திறத்தொடு கூட்டி: தகுமுறை நான்கே ஒன்றென மொழிப = பொருந்த வரிசையில் எழும் இந்நான்கும் காதலின் முதற்கூறாகுமென்று கூறுவர் புலவர்.

குறிப்பு :- இதில் கூறிய நான்கும் தலைக் கூட்டத்திலன் புறுவார்மாட்டு - ஒன்றினொன்று இன்றியமையாத் தொடர் பொடு. பொருத்தத்தோன்றி, அவரகத்து விளையுங்காதலின் முதற்குறியாய்ப் புறத்துப் புலப்படுதலின்,'இவை தகுமுறை நான்கே ஒன்றெனமொழிப' என ஒருபடித்தாத் தொகுத்துக் கூற்ப்பட்டன. பெருமையும் உரனுமுடைய தலைவன் தன் தழையுங் காதலை ஒளியானாக. அச்சமும் நானும் மடனுமுந்