பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெயப்பாட்டியல் நூற்பா சக *率逐

றுண்டு’ (குறள். 1274) எனவும் வருவனவெல்லாம் தலைவியின் நகுநய மறைப்பைக் குறிப்பனவாம்.

இனி, நாணிறந்து பெருகுங் காதலால் உருகுந் த ைல வி தன்நிறை யழிவு பிறரறியாவாறு மறைக்கு முயற்சி, 'சிதைவு பிறர்க்கின்மை' எனப்பட்டது. 'மறைப்பேன்மற் காமத்தை யானே ' (குறள் 1258) எனப் பெண்ணியல்பு கூறும் குறள் இம். மெய்ப்பாடு குறிப்பதாகும். மேற்செய்யுளில் 'நன்னுதல் அரிவை தன் மனஞ்சிதைந்ததை நீயறிந்திலையால் நெஞ்சே நானறிந்தேனது வாயாகுதலே' என வருவதுமதுவே. அதில் நன்னுதல் அரிவை தன் மனஞ்சிதைந்ததை மறைப்பதனால் "நீயறிந்திலை யால்" எனவும், அவ்வாறு அவள் 'கரப்பினும் கையிகத்தொல்லா (அவள்) உண்கண் உரைக்கலுறும்" குறிப்பால் தலைவன் அறிந்து அவள்பால் காதலுண்மையைத் தன் தளரு நெஞ்சொடு கிளந்து தேறுவனாதலின் 'யானறிந்தேனது வாயாகுதலே' எனவும் கூறிய குறிப்பறிக.

வேகனைத் தத்தை முதலில் கண்டபோது, -------------- நிறையெனுஞ் சிறையைக்கைபோய் இட்டநாண்வேலியுந்திக் கடலென வெழுந்த வேட்கை விட்டெரி கொளுவ நின்றாள் எரியுறும் மெழுகின் நின்றாள்'

(சீவக. 710)

எனினும், அவ்வாறு அழியுநதன சிதைவு பிறரறியாது அடக்கும் விருப்பால்,

'பூங்குழல் மகளிர் முன்னர்ப் புலம்பல் நீநெஞ்சே'(சீவக.7.12) என்று நெஞ்சொடு கூறித் தன் தளர்வு மறைக்கின்ற செவ்விகூறும் சிந்தாமணிச் செய்யுளடிகளாலுமிதையறிக.

இனி. தலைக்காதலின் முதற்கூறாகும் இந்நான்கு மெய்ப்பாடுகளையும் ஆரியர் நூல் கூறும் பத்தவத்தைகளுள் முதலதாக் கொள்ளும் உரையாசிரியர் கருத்துப் பொருந்தா ைம . பேராசிரியர் இச்சூத்திரத்தின்கீழ் அதனை மறுப்பதாலறிக.

ഞ്ഞ ബ- ബ

1. கண்டு உரையாசிரியர் என்றது இளம்பூரண அடிகளை,