பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உக அதிகா

பாரதியார்

கருத்து :- இது மேற்கூறியன தோன்றாவிடத்துக் கீழ்க் குறிக்கும் மெய்ப்பாடுகள் நிகழ்தலுமுண்டென்று உணர்த்துகிறது.

பொருள் :- அவையலங்கடையே = முன் கூறிய மெய்ப் பாடுகள் நிகழாவிடத்து; அவையும் உள - பின் சுட்டப்படும் பிறவும் உரியவாம்.

குறிப்பு :- ஈற்றேகாரம் அசை, "உம்மை எதிரது தழிஇய எச்சம். இஃது அடுத்த சூத்திரத்தின் முதலில்வைத்து எண்ண த் தக்கது. முன் ஆங்கவை யொருபாலாக' எனுஞ் சு த் தி ர ம் சுட்டுவன அதற்குமுன் கூறியவாராவிடத்து தி க ழ் த ற் கு சி ய எனுங் குறிப்புத் தோன்ற, அச்சூத்திர இறுதியில் "அவை, முளவே அவையலடங்கடையே' எனக் கூட்டியுரைத்த குறிப்பும் இங்குக் கருதற்பாற்று. ஆண்டு. இவையும் உளவே' என் பது பிந்திய பேராசிரியர்டா டமாயினும், 'அலையும் உளவே" என்பதே அவருக்குக் காலத்தால் முத்திய இளம்பூரணர் கொண்ட பழையபாடமாகும் அதுவே போல இதிலும் அக்குறிப் புணர்ந்த இந்நூலார் அவையும் உள' எனவே கூறுவதை நோ க் க, முன்னதிற் போலவே இதிலும் புதிய பிற மெய்ப்பாடுகள் குறிக் குங்கால். அவை முற்கூறிய நேராவிடத்தே தோன்றுமெனச் சுட்டுதற்குரிய வாய்பாடே அவையுமுளவே அவையலங்கடையே’ எனும் தொடர் என்பது தேற்றமாகும். ஆகவே, பின் கூறும் புதிய மெய்ப்பாடுகள் முன் குறித்த ற்றொடு விரவாமல் அவை யல்லாவிடத்தே தோன்றற்குரிய எனத்தெளிப்பதே ஈண்டு இந்நூ லார் குறிக்கோள். அக்குறிக்கோள் தெளிக்கும் பொருள் முடியாது இதனைத்தனிச் சூத்திரமாகத் துணித்தெண்ணுவதினும், கீழ்க் கூறும் மெய்ப்பாடுகளுக்கு மேற்குறித்தவற்றின் இயைபு தோன்ற அவற்றைக் கூறும் அடுத்த சூத்திரத்தோடு இதை இணைத்தி