பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*筑. தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

துகிறது. 20ஆம் சூத்திரம், மேலனவற்றிற்குப் புறனடையாய் அவை கூறும் அகத்துறை மெய்ப்பாடுகள் கையறவுற்றுழி: கூறியமுறையால் வினைப்பட்டுத் தோன்றாது முறை பிறழ்ந்து வ. தலும் இயல்பாமெனக்கூறும். 21முதல்24வரையுள்ள சூத்திரங்கள் புணர்ச்சி அல்லாத மற்ற நான்கு அன்புத்தினைகளுக்குரிய மெய்ப்பாடுகளைக் கூறுகின்றன. 25,26 சூத்திர மிரண்டும் நிரல்ே அன்புத் திணைக்கா வனவும் அல்லனவுமாம் குறிப்புக்களை விளக்குகின்றன. 27-ஆம் சூத்திரம், இவ்வியலுக்குப் பொதுப் புறனடையாய் மெய்ப்பாடுகளின் இயல்வகைகளை நுண்ணுணர் வுடையாரல்லார் எண்ணிவரையறுத்தலின் அருமை கூறுகிறது

பாரதியார் மெய்ப்பாட்டியற் சூத்திரங்கள்

1. பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்

கண்ணிய புறனே நானான் கென்ப.

கருத்து :- இஃது, இயற்றமிழ்ச் செய்யுளுள் யாண்டு. பயிலும் பொதுமெய்ப்பாடுகளின் தொகையும், அவை வகை: படுமாறும் கூறுகிறது. -

பொருள் :- பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொ ளும்=தனிநிலை கருதாமல் ஒருபுறக்குறியால் புலப்படும் இன: தொகுதியாய் எண்வகை மெய்ப்பாட்டுப் பொருளாகும் உண வுகள் முப்பத்திரண்டும்; கண்ணிய புறனே நானான்கென்பபொருந்தப் புலப்படும் மெய்ப்புறக்குறியால் நாலுநாலாய், தொகுத்து எண்ணப்படும் என்பர் புலவர்.'

குறிப்பு:- பொருளும் என்பதன் உம்மை, இனைத்தென அறிதலின், முற்றும்மை. பண்ணை என்பது தொகுதி. இஃது இப்பொருட்டாதல் ஒலித்தன முரசின் பண்ணை’ என்னு: கம்பரின் (மகரக்கண்ணன் வதை) செய்யுளடியாற் றெளிக; ولا முளை ஒருங்கு கிளைக்கும் ஒரு தட்டைத் துறும், சுற்ற: செறிந்த ஒரு பெருங்குடியும், உறுப்பினர் நிறைந்த ஒரு கழ: மும் தொகுதிபற்றிப் பண்ணை யெனப்படுதலானுமறிக.

1. "பண்ணை’ என்பதற்குத் தொகுதி என வும் 'கானான்கு' என்பதற்கு

கக்கான்கு என வும் பொருள் கொள்வர் காவலர் பாரதியார்