பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உ 蠍-矚

பேராசிரியம்

இது மெய்ப்பாட்டின் அடக்கங் கூறுகின்றது."

( இ- ள்.) முப்பத்திரண்டு மெய்ப்பாடும் பதினாறாதலே யன்றி எட்டாதலும் உண்டு (எ - று).

அவை வீரம் அச்சம் வியப்பு இழிபு காமம் அவலம் நகை நடுவுநிலை யென்பன. இவற்றின் விகாரமாகிய சத்துவங்களெட் டனையும் இவற்றுளடக்கி எட்டாக்கிக் கூறியவாறிது வென்பது. நாலிரண்டாதலு முண்டென்னாது பாலென்றதனான் எட்டாகலேயன்றி அவை ஒன்பதாதற்குப் பகுதியுமுடையவென்பது: என்னை?

'உருத்திரத் தன்னோ டொன்ப தாகும்’

என்பவாகலின். உம்மை இறந்தது தழி இயிற்றாதலான் இவை யும் பண்ணைத் தோன்றிய எண்ணான்கெனப்பட்டன. அவற்துப் பகுதியென இதுவும் பிறன்கோட் கூறியவாறாயிற்று." மற்றிவற்றது .ய னென்னையெனின்; பொருளதிகாரத்துக் கூறுகின்ற வழக்கியலே அவையுமென்பது கூறி, அச்சுவைக்கு ஏதுவாய பொருளினை அரங்கினுள் நிறீஇ, அது கண்டு குறிப்புஞ் சத்துவமும் நிகழ்ததுகின்ற கூத்தனையும் அரங்கிற் றந்து, பின்னர் அவையரங்கினோர் அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினை உணர்வாராக வருகின்ற முறைமையெல்லாம் நாடகவழக்கிற்கே *ரிய பகுதியெனவும், அப்பகுதியெல்லாம் ஈண்டுணர்த்தல்

1. மேல் முப்பத்திரண்டாக விரித்தும் பதினாறாக வகுத்தும் கூறிய மெய்ப். பாடுகளை இக் நூற்பாவினால் எட்டு எனத்தொகுத்துரைக்கின்றனராதலின் இங்கனம் கருத்துரை வரையப்பெற்றது.

2. காடகமகளிர் ஆடலும் பாடலுங்கண்டும் கேட்டும் காம நுகரும் இன்ப வினை. யா-அள் வெகுளிக்கு இடமின்மையின் நாடக நூலார், வீரம், அச்சம், வியப்பு, இழிபு. காமம், அவலம், நகை, கடுவுகிலை என்னும் எட்டினை யுமே பெரும்பான்மை யாகத் தோன்றும் மெய்ப்பாடுகளாகக் கொண்டு இல் எட்டினோடு உருத்திரம் எனப்படும் வெகுளியையும் சேர்த்து சுவை ஒன்பதெனக் கொண்டனர் என்பது,

'உருத்திரங் தன்னோ டொன்ப தாகும் '

எனவரும் காடகத்தமிழ் நூலாகிய செயிற்றியச் சூத்திரத்தால் உய்த்துணரப்படும். எனவே மெய்ப்பாட்டியலின் முதற்கண் உள்ள இவ்விரண்டு சூத்திரங்களும் காடகத் தமிழ்நூலார் கொண்ட வண்ணம் மெய்ப்பாடுகளின் விரியும் வகையும் தொகையும் கூறும் முறையில் அமைந்திருத்தலால் பிறன் கோட் கூறல் என்னும் உத்தியின் பாற்படும் எனப் பேராசிரியரும் இளம்பூரணரும் கொள்வாராயினர்.