பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உ 邀强。

பாட்டுணர்வுகள் எனும் எழுவாய், கொண்ட பொருட்டொடர்

பால், அவாய் நிலையிற் பெறப்பட்டது. மார்-அசை,

முன், முதற் சூத்திரத்தில் மெய்ப்பாட்டுனர்வாம் எண்னான்கு செய்யுட் பொருளும் நந்நான்காய்த் தோகை_இ வருமெனச் சுட்டியதற்கேற்ப, அவ்வாறு தொக்க எட்டும் இதன்பின்,

"நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்

றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப'

எனத் தொகுத்துக் கூறப்பட்டு, அதன் பின் அல்வெட்டன் வகை யாய்ப் பிரித்தெண்ணப்படுவன முப்பத்திரண்டும் முறையே எள்ளல் முதல் விளையாட்டீறாக விரிக்கப்படுகின்றன. அதுவே போல், வேறு எவ்வெட்டாய்த் தொகுத்து எண்ணப்படும் இயல் புடைய முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும், மேல் "அப்பா லெட்டே” எனவும் இங்கு 'நாலிரண்டாகும் பாலுமா ருண்டே' எனவும் சுட்டியதற்கேற்ப முதல் எட்டு வகை முப்பத்திரண்டும் எள்ளல் முதல் விளையாட்டிறாய் முறையே எண்ணி முடித்த பின், 'ஆங்கவை யொருபா லாக வொருபால்’’ எனத் தொடங்கி ... , ...'உடைமை இன்புறல்............நடுக்கெனாஅ இவையும் உளவே அலையலங் கடையே’’ என வேறு முப்பத்திரண்டு எண்ணி முடித்துக் காட்டப்படுதலின், இச் சூத்திரப்பொருள் இதுவாதல் தெற்றென விளங்கும். இச் செம்பொருளைவிட்டு இதுசுட்டும் நாலிரண்டும் பின் "நகையே அழுகை' என எண்ணப்படும் எட்டுமே ஆமென்பாருரைகொள்ளின், அசி சூத்திரமே 'அப்பாலெட்டே மெய்ப்பாடென்ப' என அவற்றின் எண்தொகை கூறுதலானும், முதற் சூத்திரத்தும் "நானான்காய் எண்ணான்கு பொருளாம்' என அவற்றின் எண்வகை குறிக்கப் பெறுதலானும், இச்சூத்திரம் இங்கு வேண்டப்படாது மிகை படக் கூறலாய் முடியுமென்பது ஒருதலை. ஆதலின், அது பொரு என்மை யறிக.

இனி, உய்த்துக் கொண்டுணர்தல் இரட்டுற மொழிதல் எனும் உத்திகளால் இச்சூத்திரத்துக்குப் பிறிதும் ஒருபொருள்