பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா க. ఢీ

அச்சம் = அஞ்சுதல்; பெருமிதம் = வீறு, அஃதாவது தருக்கு; வெகுளி = சினம்; உவகை = மகிழ்ச்சி என்று அப்டாலெட்டே. மெய்ப்பா டென்டி-என அத்தன்மைய மெய்ப்பாடு எட்டேயா

மென்பர் புலவர்.

குறிப்பு :- நகையே’ என்பதில் ஏகாரம் எண் குறிக்கும். ‘எட்டே என்பதில் ஏகாரம் தேற்றமாம். இதில் இனக்குறியால் தொகுதியிற் புறத்திற்றோன்றும் மெய்ப்பாட்டுத் தொகை எட்டும், இதையடுத்து இவற்றின் வகைவிரிகளான எள்ளல் முதல் விளையாட் டீறாக முப்பத்திரண்டும் கூறி, பின் இவற்றை ஆங்கவை ஒரு பாலாக எனச்சுட்டிப் பிரித்து நிறுத்தி, ஒருபால் எனத் தொடங்கி வேறு முப்பத்திரண்டு மெய்ப்பாட்டுணர்வு வகை குறிப்பதனால், இவை நந்நான்காய் எண்ணப்படும் பான்மையவாதல் ஒருமுறை, இதன்பின் பிற எவ்வெட்டாய்த் தொகுத்து எண்ணப்படும் தன்மையவாதல் மற்றொரு முறை’ யென்பது தொல்காப்பியர் குறிப்பாம். அதனால் இதிற் கூறப் படுவன நாலுநாலாய்த் தொக்கு அம்முறையில் எண்ணப்படும் எட்டாம் என்பது விளங்க (பால் தன்மையைக் குறிப்பதாகலின்) இம்மெய்ப்பாடுகள் "அப்பாலெட்டே” எனக் குறிக்கப்பட்டன. ஈற்றில் என்ப' எனும் வினைக்குப் புலவர்' எனும் எழுவாய் அவாய்நிலை.

இனி, இம்மெய்ப்பாட்டுமுறை பிற ஆரியக் கூத்து நூல் வழக்கொடுபடாமல் என்றும் இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பாய்த் தொன்று தொட்டு நின்று நிலவும் மரபிற்றாகும். இவ்வுண்மை இச்சூத்திரத்தின்கீழ் இது பிறர் வேண்டுமாற்றானன்றி இந் இாலுள் இவ்வாறு வேண்டப்படும் மெய்ப்பாடு என்பது உணர்த் துதல் துதலிற்று' எனப் பேராசிரியரே கூறுதலானும் விளங்கும். இவற்றின் இயல்வகை விரிக்கும் பிற சூத்திரங்களானும் இது விளங்கும். அன்றியும் ஆரிய நூலார் கூறும் நவரசங்கள் இம்மெய்ப்பாடுகளின் வேறாய் நடன நாட்டியச் சத்துவங்களாம். அவை முறையே சிருங்காரம், ஆசியம், கருணை, ரெளத்திரம், வீரம், பயம், குற்சை அற்புதம், சாந்தம் என்பனவாம்.

இவற்றுள், முதலில் நிற்கும் சிருங்காரம் கற்புக்கருதாக் காமக்களி. அதைச் செய்யுளிற் கொள்ளத்தகும் ஒரு பொருளாகத் தமிழ்ப்புலவர் கருதுகிலர். தமிழர் கூறும் உவகையெனும்