பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

grg? தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

இன்பமொடு புணர்ந்த ஏக்கழுத் தம்மே” எனச் செயிற்றியனார் விரித்தோதினா ராயினும் இவை யெல்லாம் இந் நான்கினுள் அடங்கும்.”

'தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு' (குறள்.கக0ளர் என்ற வழித் தம்மி லிருந்து தமது பாத்துண்ட செல்வ நுகர்ச்சி முயக்கம் புணர்பு

'வையை வருபுனல் ஆடல் இனிதுகொல் செல்வேற்கோ குன்ற நுகர்தல் இனிதுகொல் வைவேல் துதியன்ன கண்ணார் துணையா எவ்வாறு செய்வாங்கொல் யாமென நாளும் வழிமயக் குற்று மருடல் நெடியான் (பரிபாடல்) நெடுமா டக் கூடற் கியல்பு'

என வரும். பிறவு மன்ன. (ககர்

பேராசிரியம் இஃது ஈற்றுக்கண்ணின்ற உவகை உணர்த்துதல் நுத லிற்று.

(இ - ள்.) செல்வமென்பது, நுகர்ச்சி; புலனென்பது, கல்விப்பயனாகிய அறிவுடைமை; புணர் வென்பது காமப்புணர்ச்சி முதலாயின; விளையாட்டென்பது, "யாறுங் குளனுங் காவுமாடிய பதியிகந்து வருதல்’ (19:) முதலாயின. இவை நான்கும் பொருளாக உவகைச்சுவை தோன்றும் (எ - று.)

உவகையெனினும் மகிழ்ச்சியெனினும் ஒக்கும். 'உரனுடை யுள்ளத்தை செய்பொருண் முற்றிய

வளமையா னாகும் பொருளிது வென்பாய' (கலி. 12) என்புழி வளமையானா கும் மனமகிழ்ச்சி இதுவெனக் கூறினமையின் இது செல்வம் பொருளாகப் பிறந்த உவகையாம். நன்கலம் பெற்ற வுவகையர்” என்பதும் அது.

'டெண் டிர் நலம்வெளவித் தண்சாரல் தாதுண்ணும் வண்டின் துறப்பான் மலை’ (கலி, 40) என்பது அறிவுபொருளாக உவகை பிறந்தது: என்னை? முகைப்

2. செயிற்றியனார் இச் சூத்திசத் துள் விரித்துக் கூறியன யாவும் செல்வம் புலன் துகர்வு விளையாட்டு என்னும் கான் கினுள் அடங்கும் என்பதாம்.