பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 77 பாணினியை வீட்டைவிட்டுத் துரத்திவிடவே, அதனுல் வருத்த முற்ற பாணினி, சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து அவர்பால் இலக்கணங்களையறிந்து பின்னர்க் காத்தியாயனருடன் வாதுசெய்து அவர் ஒதிவந்த ஐந்திரவியாகரணத்தை யழித்தார்" என்று சோமதேவரது கதாசரித் சாகரத்திலே ஒரு கதையுளது. வடமொழியிற் பாணினியம் தோன்றியபிறகு ஐந்திரவியாகரணப் பயிற்சி அறவே இல்லாது போயிற்றென்பது இக்கதையாற் புலளுகின்றது. எல்லாம் வல்லவராகிய சிவபெருமான் முதலில் வியாகரணம் செய்தாரென்றும், அதனையொட்டி இந்திரன் வியாகரணம் செய்தானென்றும், அவன் செய்த ஐந்திரத்தைப் பிரகஸ்பதி கற்ருரென்றும், பின்னர்ப் பாணினி தோன்றித் தனது பாணினி யத்தைச் செய்ய, நாவலந்தீவிலே ஐந்திரம் அழிந்துவிட்ட தென்றும் பூ ஸ்தோ (Burstow என்பார் கூறுவர். இந்திர வியாகரணம் பாணினிக்கு முற்பட்டதென்றும் தென்னுட்டுப் பார்ப்பன மரபினனை சப்தவர்மன் என்பான், முருகக்கடவுளை யிறைஞ்சி இந்திரவியாகரணம் தனக்குப் புலனுக வேண்டுமெனக் குறையிரந்து நின்ருளுக, குமரக்கடவுள் ‘ Rத்தோ வர்ண ஸ்மாம்நாய:" என்று அடியெடுத்துக் கொடுத் ததாகவும் இத்தொடர் கலாபமான காதந்தரத்திலே முதல் சூத்திர மென்றும், இந்திரதுருவன் என்ற அந்தணன் ஐந்திரம் கற்றவனென்றும், அவ் ஐந்திரம் இருபத்தையாயிரம் சுலோகங் களே யுடையதென்றும் திபேத்திய லாமாவான தாரநாதர் என்பார் எழுதுவர். மேற்காட்டிய குறிப்புக்களால் ஐந்திரவியா கரணம் வைதிக சம்பந்தமுடையதெனக் குறிக்கப்படுதல் காண்க. ஹோய் லி Hoei-Li) என்பார் எழுதிய ஹியுவான்த்லாங் சரிதையில் ஹியுவான்த்லாங் நாலந்தா பல்கலைக் கழகத்தில் பிரமநூல் (வேதம்) பயின்ருரெனவும், அதனைக் கற்ப ஆரம்பத்தில்