பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 தமிழிலக்கிய வரலாறு i0 பெற்று வந்த இலக்கண முறையாகுமென்றும், புறச் சமயிகளுள் ஜைனர்கள் இவ்வியாகரணத்தைப் போற்றி வந்தனரென்றும், ‘ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் எனக் கூறப்படுவதனுலே தொல்காப்பியரும் ஜைன சமயத்தைச் சார்ந்தவரென உய்த் துணரலாமென்றும் பாணினியின் பேரிலக்கணத்தைத் தொல்காப் பியனர் கையாண்டுள்ளாரென்றும் அறிஞர் வையாபுரிப் பிள்ளை யவர்கள் கூறியுள்ளார்கள்." வேத காலத்தை யொட்டிய வடமொழி இலக்கியங்களி லமைந்த மொழி நடையினை யுளத்துட்கொண்டு எளிய முறையி லியற்றப்பெற்ற வடமொழித் தொன்மை வியாகரணமே ஐந்திர மென்பது வடமொழி தென்மொழிகளில் வல்ல பண்டைச் சான்ருேள்களின் துணியாதல் முன்னர் விளக்கப்பட்டது, இந்திர ஞற் செய்யப்பட்ட ஐந்திர நூற் பயிற்சியைப் பராசரன் என்னும் வேதியன் பாராட்டிப் போற்றினனெனவும் கவுந்தியடிகள் என்னும் சமணத்துறவி ஐந்திர நூற் பயிற்சியைப் புறக்கணித்துத் தம் சமயநூலாகிய பரமாகம நூற்பொருளைப் பாராட்டி யுரைத்தன ரெனவும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திற் குறிப்பிட்டு அவ்விருவர் மன நிலையையும் இனிது புலப்படுத்துகின்றர். ஆகவே ஐந்திர வியாகரணம் வைதிகரல்லாத சமணர் முதலிய புறச் சமயத்தாராற் போற்றிப் பயிலப்பெற்ற பிற்காலத்து நூலென்னுங் கொள்கை பொருந்தாமை காணலாம். யாஸ்கரது நிருத்தத்தில், "சத்வாரி பதஜாதாநி நாமாக்யா தோசோபசர்க்க நிபாதச்ச" எனச் சொற்களின் பாகுபாடு வரையறுக்கப்பட்டுளது. நாமம், ஆக்யாதம், உபசர்க்கம், நிபாதம் எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பது இதன் கருத்து. ஆனல் பாணினியத்தில் 'லப்திங்-அந்தம் பதம்" (, 4, 14) என வருகின்றது. இச்சூத்திரப் பொருளையே தொல் 1. தமிழ்ச் சு.ர்மனிகள். பகக்ம் 27-32.