பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 தொல்காப்பியம் காப்பியனுர் "சொல்லெனப்படுப பெயரே வினையென், ருயிரண் டென்ப அறிந்திசினேரே" என்ற சூத்திரத்தாற் கூறினரென்றும் "இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்று வழி மருங்கிற் ருேன்று மென்ப' என அடுத்து வருஞ் சூத்திரத்தால் முற்கூறிய யாஸ்கரது நிருத்தம் கூறிய பொருளையும் தொல்காப் பியர் உடன்பட்டனரென்றும், பாணினி முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் சிகூைடியில், "அஷ்டெள ஸ்தாநாதி வர்ணு நாம் உர : கண்ட சிரஸ்ததா : ஜிஹ்வா மூலஞ்ச தந்தாஸ்ச நாசி கோஷ்டெள சதாலுச” என வரும் சூத்திரப் பொருளையே "உந்தி முதலா முந்து வளி தோன்றி” எனத் தொடங்கும் சூத்திரத்தால் தொல்காப்பியர் கூறியுள்ளாரென்றும், ஆகவே பாணினிக்கு முற்பட்டவர் தொல் காப்பியர் என்னும் கொள்கை சிறிதும் ஒப்புக்கொள்ளத் தக்கதன் றென்றும் அறிஞர் பிள்ளையவர்கள் கூறியுள்ளார்கள்." "லாப்திங் அந்தம் பதம்" என அவர்கள் எடுத்துக்காட்டிய பாணினியச் சூத்திரம், பதமாவது இதுவென அதன் இலக்கணங் கூறுவதாகும். வேற்றுமை யுருபுகளையும் வினையுருபுகளையும் ஈற்றின்கட்கொண்டவை பதமாம் என்பது இதன் பொருளாகும். "சொல்லெனப்படுப பெயரே வினையென், ருயிரண் டென்ப அறிந்திசினேரே" எனவருந் தொல்காப்பியச் சூத்திரம் சொற். பாகுபாடு உணர்த்தவெழுந்ததாகும். சொல்லென்று சிறப்பித் துரைக்கத்தக்கன பெயரும் வினையும் என அவ்விரண்டென்று கூறுவர் அறிந்தோர், என்பது முற்கூறிய சூத்திரத்தின் பொருளாகும். ஆகவே கருத்தினுல் வேறுபட்ட இவ்விரு சூத்திரப் பொருள்களையும் ஒன்றெனக் கோடல் பொருந்தாகை 1. தமிழ்ச் சுடர்மணிகள், ம்ெ, 31-32.