பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு {{}} வெளிப்படை, அன்றியும் யாஸ்கரது நிருத்தத்தில் நாமம், ஆக்யா தம். உயலர்க்கம், நிபாதம் எனக் கூறப்பட்ட நால் வகைச் சொற்பாகுபாட்டிற்கும் தொல்காப்பியத்தில் பெயர், வினை, இடை, உரி எனக் கூறப்பட்ட நால்வகைச் சொற்பாகுபாட்டிற்கும் பெரிதும் வேற்றுமையுளது. நாமம் என்பது பெயர். ஆக்யா தம் என்பது வினைவிகுதி. உபசர்க்க மென்பது வினையின் முன் அடைமொழியாய் ஒட்டிநின்று அதன் பொருளே மாற்றுவது. ஹாரம் என்ற வினை, விஹாரம், பிரஹாரம் சம்ஹாரம், ஆகாரம் எண்முறையே உபசர்க்கத்தைப் பெற்று விளையாட்டு, அடித்தல், அழித்தல், மாற்றுதல், உணவு என வேறு வேறு பொருள்களைத் தருதல் இவண் கருதத்தகுவதாகும்: நியாதம் என்பது நமது தமிழிலுள்ள இடைச் சொல்லையொத்து வழங்குவது. எனவே தொல்காப்பியர் கூறிய நால்வகைச் சொற்களும் நிருத்தம்கூறும் நால்வகைச்சொற்களும் பொருளான் வேறுபாடுடைய என்பது இவற்றின் இயல்புகளே ஒப்புநோக்கி ஆராய்வார்க்கு இனிது புலளும். நான்கென்னும் எண்ணிக்கை யொன்றனையே விடாப்பிடியாகக்கொண்டு இவற்றை ஒன்றெனக் காட்ட முயலுதல் ஏற்புடையதன்ரும். நாவின் அடிப்பகுதி, பல், முக்கு, உதடு, வாயின் உட்புற இருமருங்கு மார்பு, மிடறு, தலை ஆகிய எண்வகையிடங்களும் எழுத்துக்களின் பிறப்பிடமெனப் பாணினி முனிவரியற்றிய சி ைகூடி யிலுள்ள சூத்திரம் கூறுகின்றது. எழுத்துக்கள் பிறக்குமிடம்பற்றிய வரையறை எல்லா மொழிக்குமுரிய பிறப்பிலக்கணமாதலின் அதனை முதன்.முதற்கண்டு உலகிற்குணர்த்தியவர் இன்னரென்று துணிந்துரைத்தலியலாது. அன்றியும் பாணினி சிகூைடியிற் கூறப் படும் எழுத்தின் பிறப்பு முறைக்கும் தொல்காப்பியத்திற் கூறப் படும் எழுத்தின் பிறப்பு முறைக்கும் எத்தகைய தொடர்புமில்லை. சிகூைடியிலிருந்து எடுத்துக்காட்டிய சூத்திரம் எழுத்துக்கள் ஒறத்தற்குரிய எண்வகையிடங்களைமட்டும் கூறுகின்றது. எழுத்