பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ క్షీక தொல்காப்பியம் பொழு திரண்டின், இயல்பென மொழிய இயல்புணர்ந் தோரே' என்பதளுல் ஆ சிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். இங்கு எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் உலகம் என்பது இல்பொரு என்று, அடிக்கடி நிலைமாறுமியல்பிற்ருகிய உள்பொருளே யென் பது தொல்காப்பியனர் கொள்கையாதல் நன்கு பெறப்படும். கடவுள், உலகம் என்பவற்றின் வேருக உயிர் என்பதனைத் தனிப்பொருளாகக்கொண்டு அவ்வுயிர்கள் பலவெனத் தொல் காப்பியனர் தம் நூலுள் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். உயிர் கள் என்றும் அழிவில்லன என்பது தமிழர்கொள்கை. உயிர்கள் என்றும் நிலைபேறுடையவாதலின் அவற்றை மன்னுயிர் என வழங் குதல் தமிழ் வழக்கு, இப்பழைய வழக்கினைத் தொல்லுயிர் என்ற தொடரால் தொல்காப்பியரும் உடன்பட்டு வழங்கியுள்ளார். *உயிர் எத்தன்மைத்து என்று வினுயவழி, உணர்தல் தன்மைத்து என்றல் செவ்வன் இறையாம் என்பர் சேருவரையர். இதனுல் உணருந்தன்மையுடையது எதுவோ அதுவே உயிர் என வழங்கப் பெறும் என்பது நன்கு விளங்கும். எல்லாவுயிர்க்கும் அறியுந் தன்மை பொதுவியல்பாகும். உயிர்களது உடம்பின்கண் அமைந்த உறுப்புக்களின் குறைவு மிகுதிகளுக்கேற்ப அவற்றின் உணர்ச்சி வாயில்கள் வேறுபடும் நீர்மையனவாம். புல் முதல் மக்களிருக வுள்ள அறிவுடைப்பொருள்கள் யாவும் உயிர்களேயாம். அவற்றின் அறிவு அவைபெற்ற பொறிகளின் குறைவு மிகுதிகளுக்கேற்பக் குறைந்தும் வளர்ந்தும் அமைந்த இயல்பினைத் தொல்காப்பிய ஞர்க்கு முற்பட்ட தமிழ்ச் சான்ருேர்கள் நுணுகி ஆராய்ந்து கண்டார்கள், அவ்வாராய்ச்சியின் பயனக எல்லாவுயிர்களையும் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயர் ஈருகப் பகுத்துணரும் தெளிவு பெற்ருர்கள். புல், மரம் என்று சொல்லப்படும் தாவரவுயிர்கள் தொட்டால் அறியும் ஊற்றுணர்வொன்றேயுடையன. ஆதலின் அவை ஒரறி வுயிர்களெனப்படும். நத்தை,சங்கு, இப்பி முதலியன பிறிதொன்று