பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 15% பொருளினும் என்ற தொடராலும், பெரியோர்க்கு ஒழுக்கமே பெரிது எனத் தோழி அறிவுறுத்து மியல்பினைப் பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து என்ற தொடராலும் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். ஆகவே ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்த தென்பது ஆசிரியர் துணியாதல் பெறப்படும். ஒழுக்க நெறி யினைக் குறிக்கொண்டு போற்ருது ஒருவர் பிறர்க்குச் செய்த கொடுஞ்செயல், செய்த அவரையே பற்றி வருத்தும் என்பர். இவ்வுண்மையினை கொடியோர் கொடுமை சுடும் எனத் தம் காலத்து வழங்கிய பழமொழியின் வாயிலாக ஆசிரியர் அறிவுறுத்துந் திறம் நினைக்கத் தகுவதாம். எல்லா வுயிர்களாலும் விரும்பி நுகரப்படுவது இன்பம். அவ்வின்பத்திற்குக் காரணமாக அறிவுடைய மக்களால் ஈட்டப் படுவது பொருள். பிறர்க்குத் தீங்கு நினையாத மாசற்ற மனத் தால் பொருள் செய்தொழுகும் முறை அறம். நுகர்தல் வேட்கை முறை பற்றி இன்பம், பொருள், அறம் எனவும், செய்கை முறை பற்றி அறம், பொருள், இன்பம் எனவும் இம்மூன்றையும் எண் ணுதல் மரபு. இன்பமும் பொருளும் அறனுமென்றங், கன் பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற், காமக் கூட்டம்' என நுகர்ச்சி முறையிலும், அந்நிலைமருங்கின் அறமுதலாகிய மும் முதற்பொருட்கும் உரிய என்ப' எனச் செய்கைமுறையிலும் வைத்து ஆசிரியர் எண்ணியுள்ளார். அறம், பொருள், இன்பம் என்னும் முன்றைத் தவிர அறிவுடைய மக்களால் விரும்பி மதித்தற் குரியன பிற இன்மையின் இம் முன்றையும் மும்முதற்பொருள் என ஆசிரியர் சிறப்பித்துப் போற்றினர். அறத்தினுற் பொருளாக்கி அப்பொருளால் இன்பம் நுகர்தலே மக்களது நல்வாழ்க்கை முறை யாகும். இவ்வாறு மூன்று பகுதிகளாக நிகழும் இவ்வுலக வாழ்க்கையின் இயல்பினை மூன்றன்பகுதி எனத் தொல்காப்பியர் தொகுத்துரைத்தார். உலகியல் நூலாகிய திருக்குறளை இயற் றிய தெய்வப்புலமைத் திருவள்ளுவனரும் தொல்காப்பியனர்