பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 1.63 தவ வேடத்தினையும் உணர்த்தி நிற்றல் முன்னர் விளக்கப் பெற்றது. ஆகவே படிமையோன் எனத் தொல்காப்பியனுக் சிறப்பிக்கப்படுதல் கொண்டு அவரது சமயம் சமணமே எனத் துணிதற்கு வழியில்லே யென்க. (2) மயிலைநாதருரையிற் குறிக்கப்படும் அகத்தியச் சூத்திரங் களும் அவிநயச் சூத்திரங்களும் காலத்தாற் பிற்பட்ட்னவென்பது அவற்றின் சொல் நடையால் நன்கு விளங்கும். இச்சூத்திரங்களே இயற்றிய அகத்தியனரும் அவிநயஞரும் தொல்காப்பியர்ைக்குக் காலத்தாற் மிகமிகப் பிற்பட்டவராவர். இவர்கள் இயற்றிய சூத்திரங்களைக் கொண்டு இவர்களது சமயம் இதுவெனத் துணி தற்கும் இடமில்லை. ஆகவே தொல்காப்பியனுர் சமயம் இ.தெனத் துணிதற்கு மயிலைநாதருரையில் மேற்கோளாகக் காட் டப்பட்ட அகத்தியச் சூத்திரங்களும் அவிநயச் சூத்திரங்களும் ஒரு சிறிதும் சான்ருதலில்லையென்க. (3) இப்பொழுதுள்ள சமண் சமய நூல்களில் ஆசாரங்க சூத்திரம், சுருதி ஸ்கந்தம் இரண்டு, முன்று, நான்கு, ஏழாம் அத்தியயனங்களில் உயிர்கள் உலவு தற்கிடமாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் இடவகையால் உயிர்களை நால்வகைப் படுத்து அவ்வுயிர்களுக்கு ஒருசிறிதும் துன்பம் நேராதபடி மக்கள் ஒழுகவேண்டிய முறை விரித்துரைக்கப் பெற்றுளது. அந்நூலின் ஆரும் அத்தியயனத்தில் ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐயறிவு எனப் பகுத்துரைக்கப்படும் எல்லாவுயிர்களுக்கும் இன்ப துன்பங் களும் அச்சமும் உளவாகலின் அவ்வுயிர்களுக்கு எத்தகைய தீங்கும் செய்தலாகாது என்ற அளவே அறிவுறுத்தப்பட்டுளது. அறிவின் ஏற்றத் தாழ்வு கருதாது எல்லா வுயிர்களையும் ஒப்ப நோக்கிப் பாதுகாத்தல் வேண்டுமென்பதும், நிலன், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கிடங்களிலும் உயிர்கள் விரவி வாழ்தலால் 1. இந்நூல் 84-85-ஆம் பக்கம்,