பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 17; கொண்டு தொல்காப்பியரைது சமயம் சமணமே என்று கோடற்கு எள்ளளவும் தெரடர்பில்லை யென்க. இதுகாறும் கூறியவற்ருல் சமண புத்த சமயங்கள் இந் நாட் டில் தோன்றுதற்குப் பல நூற்ருண்டுகள் முற்பட்ட தொன்மைக் காலத்தவர் தொல்காப்பியர் என்பதும், தொல்காப்பியத்துள் சமண சமயத்தைப் பற்றிய குறிப்புக்கள் சிறிதும் இல்லையென்ப தும், மாயோன், சேயோன், வருணன், வேந்தன் என்னும் நிலத் தெய்வ வழிபாடுகளையுங் கொற்றவை வழிபாட்டினையும் சிறப்பாக எடுத்தோதிய தொல்காப்பியஞர், சமணம், புத்தம் முதலிய புறச் சமயக் கோட்பாடுகளைத் தம் நூலுள் யாண்டுங் குறிப்பிடவில்லை யென்பதும், அவ்வாசிரியர் தம் காலத்தில் நிலவிய தமிழ்நாட்டு வழிபாட்டு முறைகளையும் சான்ஞேர் கொள்கைகளையும் ஒத்த மதிப்புடன் எடுத்துரைத்து விளக்குதலால் முழுமுதற் பொருளா கிய கடவுள் ஒன்றே யென்னுந் தெளிவுடைய கொள்கையின ரென்பதும் நன்கு புலகுைம். உலகம், உயிர் என்பவற்றிற்கு வேருகக் கடவுள் என்னும் பேரறிவுப் பொருள் ஒன்று உண்டென்பதும், கடவுளை வழிபடும் வாயிலாகப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறக்கும் நல்வாழ் வினே மக்கள் பெறலாம் என்பதும், தெய்வ வழிபாட்டினுல் வினைப் பயன்களை வென்று மேன்மேற் சிறத்தல்கூடுமென்பதும் தொல்காப்பியனர் கொண்டொழுகிய கடவுட் கொள்கையாகிய ஒழுக்க நெறியின் முடிந்த பொருளாகும். இம்முடியினைத் தெளி வாக ஏற்றுக் கொள்ளாத சமயம் எதுவாயினும் அது தொல் காப்பியத்துக்கு முற்பட்ட தொன்மை யுடையதாயினும் ஆசிரியர் தொல்காப்பியனர் கருத்துக்கு ஏற்றதன்றென உணர்தல்வேண்டும். தமிழ் மக்கள் அனைவர்க்கும் பயன்பட இயற்றமிழ் முதல் நூலாகிய தொல்காப்பியத்தை இயற்றிய ஆசிரியர் தொல் காப்பியனுர், தம்மால் இயற்றப்பெறும் தொல்காப்பியம் என்ற