பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

怒 தொல்காப்பியம் நுதலியபொருள் 3. பிறப்பியல் அகர முதல் னகரவிறுதியாகவுள்ள் முதலெழுத்துக்கள் முப்பதையும் நூன்மரபிலும் சார்பெழுத்து மூன்றையும் மொழி மரபிலும் வைத்துணர்த்திய ஆசிரியர். அம்முப்பத்து முன்றெழுத் துக்களின் பிறப்பு முறையினை இவ்வியலால் உணர்த்துகின்ருர். அதல்ை இவ்வியல் பிறப்பியலென்னும் பெயர்த்தாயிற்று. உந்தியிலிருந்தெழுகின்ற காற்ருனது தலை, மிடறு, நெஞ்சு என்னும் மூன்றிடங்களிலும் நிலைபெற்று அவற்றுடன் பல், உதடு, நா, முக்கு, அண்ணம் (மேல்வாய்) ஆகிய உறுப்புக்கள் தம்மிற் பொருந்தி அமைதிபெற வேறுவேறுருவாகிய எழுத்துக்களாய்ப் பிறந்து புலப்பட வழங்குதலே எழுத்துக்களுக்குரிய பொதுவாகிய பிறப்பு முறையாகும். இதனை இவ்வியலின் முதற் சூத்திரத்து ஆசிரியர் விரித்துரைக்கின்ருர். உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் தத்தம் நிலைதிரியாது மிடற்று வளியாற் பிறக்கும். எனவே உயிரெழுத்துக்களின் பிறப்பிடம் மிடறு என்பது புலனும். ஓரிடத்தே ஒரு முயற்சியாற் பலவெழுத்துக்கள் பிறக்குமெனப் பொதுவகை யாற் கூறினும் அவ்வெழுத்துக்களிடையே நுண்ணிய வேறுபாடு கள் உள்ளனவென ஆசிரியர் தெளிவுபடுத்துகின்ருர். இவ்வியலின்கண் 7-முதல் t -வரையுள்ள சூத்திரங்களில் கங், சஞ, டண, தந, ஆகிய மெய்யெழுத்துக்களுக்கு நெடுங் கணக்கு முறை பற்றிப் பிறப்புக் கூறுகின்றர். 12 முதல் நாவதிகாரம் பற்றிப் பிறப்புக்கூறத் தொடங்கி றன, ஏழ, லள, பம, வய, என்னும் மெய்யெழுத்துக்களுக்குப் பிறப்புக் கூறியுள் ளார். இங்குப் பிறப்புக்கூறிய மெய்யெழுத்துக்களுள் மெல்லெழுத் தாறும் தத்தம் பிறப்பினது ஆக்கஞ் சொல்லிய இடத்தே நிலை பெற்றனவாயினும் அவை முக்கின்கண் உளதாகிய காற்ருேசை பால் இயைபுபெறத் தோன்றியொலிப்பனவாம். இவ்வாறு மெல்லெழுத்தாறுக்கும் முக்குவளியின் தொடர்புடைமையினைச்