பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 தொல்காப்பியம் நுதலியபொருள் கூறிய ஆசிரியர், அவையொழிந்த உயிரீற்று அஃறிணைப் பெயர் களையும் ஏனை வினைமுற்று வினையெச்சம் பெயரெச்சங்களையும் அகரவீறுமுதல் ஒளகாரவீறுமுடிய நெடுங்கணக்கு முறையில் வைத்து உணர்த்துகின்ருர். இவ்வியலில் 93-சூத்திரங்கள் உள் ளன. அவற்றுட் பல மாட்டேற்று முறையில் அமைந்தனவாகும். இவ்வியலிற் கூறப்பட்ட விதிகள் யாவும் வல்லெழுத்து மிகுவன, இயல்பாவன, மெல்லெழுத்து மிகுவன, உயிர்மிக வருவன, நீடவருவன, குறுகிவருவன, சாரியைபெறுவன, பிறவாறு திரிவன என்னும் இவ்வகையுள் அடங்குவனவாகும். அ, இ, உ, என்னும் மூன்று சுட்டின் முன்னும் உயிரும் யகரமும்வரின் வகரவொற்றும் கசதபஞநமவ என்பனவரின் வந்த ஒற்றெழுத்துக்களும் மிகுமென்பதும் செய்யுளுள் சுட்டு நீண்டு முடியுமென்பதும் 3-6, 34, 35, 53-ஆம் சூத்திரங்களிற் சொல்லப் பட்டன. அ, ஆ, ஈ, உ, ஊ, ஏ, ஓ, ஒள என்பவற்றை ஈருகவுடைய பெயர்கள் அல்வழி வேற்றுமையாகிய ஈரிடத்தும் வல்லெழுத்து மிகப்பெறுமென்றும், இகர ஐகார வீற்றுப் பெயர்கள் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வல்லெழுத்து மிகப்பெறுமென்றும் 1, 14, 19, 22, 33, 47, 57, 62, 64, 72, 74, 78, 87, 90, 93-ஆம், சூத்திரங்களில் ஆசிரியர் விரித்துக்கூறியுள்ளார். அல்வழிக்கண் அகரவீற்றுள் அன்னவென்னும் உவமவுருபும், அண்மைசுட்டிய உயர்திணை விளிப்பெயரும், செய்ம்மன என்னும் வினைச்சொல்லும், ஏவலைக் கருதிய வியங்கோள் வினையும், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமும், செய்யிய என்னும் வாய் பாட்டு வினையெச்சமும், அம்ம என்னும் உரையசையும், அகர வீற்றுப் பலவறிசொல்லும், ஆகார வீற்றுள் ஆ, மா என்னும் பெயர்ச்சொல்லும், உயர்திணை விளிப்பெயரும், யா வினவும் முற்றுவினையும், மியா என்னும் அசைச் சொல்லும், தன் தொழிலைக்