பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் மயங்கியல் 21. குறித்துவரும் ஆகார விைைவயுடைய வினைச்சொல்லும், ஈகார வீற்றுள் நீ, மீ என்பனவும் பகரவீகாரமும், உகரவீற்றுச் சுட்டுப் பெயர்களும், தேற்றப் பொருளில் வரும் எகரவீறும், சிறப்புப் பொருளில் வரும் ஒகரவீறும், மாறுகோளெச்சப் பொருளிலும் விளுப்பொருண்மையிலும் எண்ணுப்பொருண்மையிலும் ஐயப் பொருண்மையிலும் வரும் ஏகார ஓகார வீற்றிடைச் சொற்களும் வல்லெழுத்து மிகாது இயல்பாவன. அகரவீற்று மரப்பெயரும் ஆ, இ, உ, எ, ஐ ஆகிய ஈறு களில் எடுத்தோதிய பிடா, தளா, மா (மரம்) ஆ, மா, (விலங்கு) உதி, ஒடு, சே, விசை, ஞெமை, நமை என்னும் பெயர்களும் வல்லெழுத்து முதன்மொழிவரின் மெல்லெழுத்து மிக்கு முடிவன வாம். யா, பிடா, தளா, புளி (சுவை) என்பன வல்லெழுத்துப் பெறுதலுமுண்டு. உம்மைத்தொகைக்கண்வரும் ஆகாரவீற்றுப்பெயரும் வேற்று மைக்கண் குறிற்கீழ் நின்ற ஆகாரவீற்றுப்பெயரும் ஒரெழுத்தொரு மொழியாகிய ஆகார வீற்றுப்பெயரும் அகரம் மிக்கு முடியும். இரா என்னுஞ் சொல்லுக்கு அகரமிகுதல் இல்லை. குறிற்கீழ் நின்ற ஊகாரவீறும் ஒரெழுத்துத்தொரு மொழியாகிய ஊகார வீறும் வேற்றுமைக்கண் உகரம் மிக்குமுடியும். ஏ யென்னும் பெயர் வேற்றுமைக்கண் எகரம் மிக்கு முடியும். ஒகாரவீறு வேற்றுமைக் கண் ஒகரம் மிகும். ஒளகாரவீற்றுப் பெயர் இருவழியிலும் உகரம் மிகும். செய்யுட்கண்வரும் அகரச்சுட்டும், அம்ம என்னும் இடைச் சொல்லிறுதியும், பல சில என்னுஞ் சொற்களின் இறுதி அகரமும், ழகரமெய்யையூர்ந்த இறுதி உகரமும் நீண்டு முடிவனவாம். ஆ. முன்வரும் பகர வீகாரம் குறுகும். குறிற்கீழ் நின்ற இறுதி ஆகாரம் குறுகி உகரம் பெறும்.