பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரியல் $$ இங்கெடுத்துக்காட்டிய பெயர் விகற்பமெல்லாம் தம் காலத்தே தமிழகத்தில் வழங்கப்பெற்றனவாதலின் இவற்றைப் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயர்களில் அடக்கிக் கூறினர் ஆசிரியர். ஆ, யானை, தெங்கு, பலா என்ருற்போன்று ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் வழங்கும் அஃறிணைப் பெயர்களே 'அஃறிணையியற்பெயர் எனக் குறியிட்டு வழங்குவர் தொல் காப்பியர். இவற்றை நன்னூலாரும் பிறரும் பால்பகா அஃறிணைப் பெயர் என வழங்குவர். ஒருவர்க்குக் காரணங் கருதாது சாத் தன், கொற்றன் என்ருங்கு இயல்பாக இட்டு வழங்கும் பெயர் இயற்பெயரெனப்படும். பெருங்காலன், முடவன் என்ருற்போன்று சினையுடைமைபற்றி முதற்பொருளுக்கு வழங்கும் பெயர் சினப் பெயராம். சீத்தலைச்சாத்தன், கொடும்.புறமருதி என்ருற்போன்று சினைப்பெயரொடு தொடர்ந்துவரும் முதற்பெயர் சினைமுதற் பெயராம். பிறப்பால் ஒருவரோடொருவர்க்குளதாகிய முறை பற்றித் தந்தை, தாய் முதலாக வழங்கும் பெயர்கள் முறைப் பெயர்களாம். இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் ஆகிய இவையும் தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்பனவும் இருதிணைக்கும் உரியனவாய் வழங்கும் பொதுப் பெயர்களாகும். இவற்றை விரவுப்பெயர் என வழங்குதலும் உண்டு. மேற்கூறிய இயற்பெயர், சினேப்பெயர், சினைமுதற் பெயர் ஆகிய மூன்றும் ஆண்மை பெண்மை ஒருமை பன்மை என இந்நான்குங் காரணமாக இருதிணைக்கும் பொதுவாகி வழங்குங் கால் முந்நான்கு பன்னிரண்டுவகைப்படுமென்றும், முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர் என இரு வகைப்படுமென்றும், இவை பெண்மை சுட்டிய பெயர், ஆண்மை சுட்டிய பெயர். ஒருமை சுட்டிய பெயர், பன்மை சுட்டிய பெயர் என நான்காயடங்குமென்றும், இவற்றுள் பெண்மை சுட்டிய பெயர் உயர்திணையில் பெண்ணுெருத்தியையும் அஃறிணையில் பெண்னென்றையம் உணர்த்துதலும், ஆண்மை சுட்டிய பெயர்