பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 தொல்காப்பியம் நுதலியப்ொருள் பெற்றேர் கற்பித்தலானும், அந்தணர் சான்றேர் அருந்தவத் தோர் விருந்தினர் முதலியோர்பால் இன்னவாறு நடந்துகொள் ளுதல் வேண்டுமெனத் தலைமகன் தலைமகளுக்குக் கற்பித்தலா னும், நின் மனைவியை இவ்வாறு பாதுகாப்பாயாக எனத் தலைவ னுக்கும் நின் கணவனுக்கு இவ்வாறு பணி செய்தொழுகு வாயாக எனத் தலைவிக்கும் சான்றேர் கற்பித்தலானும் இவ் வதுவைச் சடங்காகிய கரணமும் கற்பெனப்படுவதாயிற்று என்பர் நச்சினர்க்கினியர். தலைவன் தலைவி யிருவரும் ஒருவரை யொருவர் இன்றியமையாதவராய் மணந்து வாழுங்கால் தலை மகளது மனத்தின்கண் அமைந்த கலங்கா நிலைமையாகிய திண்மையே கற்பெனப்படும். 'கற்பென்னுந்திண்மை” என்ருர் திருவள்ளுவர். இத்தகைய மனவுறுதியை உலகத்தாரறியப் புலப்படுத்துவது திருமணச் சடங்காகிய கரணமேயாகும். காதலர் இருவரும் பிரிவின்றியியைந்த நட்புடையார் என்பதனை வலியுறுத்து வது வதுவைச் சடங்காகிய இக்கரணமே யாதலின் இந்நியதி பிழைபடுமேல் அவ்விருவரது வாழ்க்கையில் சாதலையொத்த பெருந் துன்பம் நேருமென்பது திண்ணம். கரணம் பிழைக்கில் மரணம் பயக்கும் என நம் நாட்டில் வழங்கும் பழமொழி இதனை வலியுறுத்தல் காணலாம். தலைவன், தலைமகளைப் பெற்ருேரறியாது உடன்போக்கில், அழைத்துச் சென்றவழி, அவளுடைய பெற்ருேரது உடன்பாடின்றி யும் கரணம் நிகழ்தலுண்டென்பர் ஆசிரியர். எனவே மகட் கொடைக்குரிய பெற்ருேரது இசைவில்லாது போயினும் காதல ரிருவரது உள்ளத்துறுதியைப் புலப்படுத்துவதாகிய திருமணச் சடங்கு உலகத்தாரறிய நிகழ்தல் இன்றியமையாததென்பது நன்கு புலனும். இத்திருமணச் சடங்கு மிகப்பழைய காலத்தில் நாட்டில் எல்லா மக்களுக்கும் விதிக்கப்பட்டிலது, படைப்புக் காலந் தொட்டு நிலைபெற்று வரும் மூவேந்தர் குடும்பத்திற்கே முதன் முதல் வகுக்கப்பட்டிருந்தது. அரசியலாட்சியில் பட்டத்தரசி