பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் #33 முதன்மை பெறுதல் காரணமாகவே இவ்வரையறை விதிக்கப் பட்டிருத்தல் வேண்டும். வண்புகழ் மூவராகிய மேலோர் மூவர்க்கும் வகுத்த கரணம் அவர்கீழ் வாழும் குடிமக்களுக்கும் உரியதாயிற்று. இச்செய்தி, மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம், கீழோர்க்காகிய காலமும் உண்டே' எனவரும் இவ்வியற் சூத்திரத்தால் நன்கு விளங்கும். ஒருவன், ஒருத்தியை அன்பினுற் கூடியொழுகிப் பின்னர் அவளை யறியேன் எனப் பொய் கூறுதலும், நின்னைப் பிரியேன் எனத் தெய்வத்தின் முன்னிலையில் உறுதிகூறிப் பின் அதனை வழுவிக் க ைட ப் பி டி யி ன் றி யொழுகுதலுமாகிய தீய வழக்கங்கள் இந்நாட்டில் தோன்றிய பின்னரே சான்ருேராகிய குடும்பத் தலைவர்கள், கணவனும் மனைவியும் பிரிவின்றி வாழ்தற் குரிய மணச் சடங்காகிய கரணத்தை வகுத்தமைத்தார்கள். இச் செய்தி, " பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப ” எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் இனிது விளங்கும். பொய்யாவது செய்ததனை மறைத்தல், வழுவாவது செய்ததன் கண் முடிய நில்லாது தப்பி யொழுகுதல், கரணத்தொடு முடிந்த காலையில் அவையிரண்டும் நிகழாவா மாதலாற் கரணம் வேண் டுவதாயிற்று என்பர் இளம்பூரணர். ஐயர் என்னுஞ் சொல் தலைமைச் சிறப்புடைய பெரியோரைக் குறித்து வழங்குந் தனித்தமிழ்ச் சொல்லாகும், அச்சொல் ஈண்டு தமிழ்க்குல முதல்வராகிய முன்னேரைக் குறித்து நின்றது. இதனை ஆர்ய என்னும் வடசொல்லின் திரியாகப் பிறழவுணர்ந்து இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு மாறுபடப் பொருள் கூறினரு முளர். 'என்னைமுன் னில்லன்மின் தெவ்விர் பலரென்ன, முன்