பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 133 ரடிகள் வழங்குதலால் இச்சொல் இக்காலத்திற்போல முற்காலத் திற் சாதிப்பெயராக வழங்கியதில்லையென்பது நன்கு துணியப் படும். பல நூருண்டுகட்கு முற்பட்ட தமிழ் நூல்களிலும் கல் வெட்டுக்களிலும் ஐயரென்னும் இச்சொல் சாதிப்பெயராக வழங் கப்பெற்றிலது. அங்ங்னமாகவும் மிகப் பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் வழங்கிய ஐயரென்னுஞ் சொல்லுக்கு இக் காலச் சாதிப்பெயர் வழக்கத்தை யுளத்துட்கொண்டு 'ஆரிய மேலோர்’ எனப் பொருள் கூறுதல் வரலாற்று முறைக்கு ஒவ்வாத பிழையுரையாதல் திண்ணம். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் கரணம் யாத்தன ரெனவே, அவை தோன்ருத காலம் மிக முந்திய தென்பதும் அக்காலத்தில் இத்தகைய வதுவைச் சடங்குக்கு இன்றியமை யாமை நேர்ந்ததில்லையென்பதும், 'ஐயர் யாத்தனர் கரணம் என்ப' எனத் தொல்காப்பியனுர் தமக்கு முன்னேர் கூற்ருக வைத்துரைத்தலால் இக்கரண வரையறை அவர் காலத்துக்கு முன்னரே தமிழ் முன்ஞேர்களால் விதிக்கப்பட்டதென்பதும் நன்கு துணியப்படும். முன் பொய்யும் வழுவுந் தோன்ருத களவு மணத் தில் பின் அவை தோன்றியதற்குத் தமிழரொடு தொடர்பில்லாத வேற்றினத்தாரது வருகையே காரணமாதல் வேண்டும். களவொழுக்கம் ஒழுகா நின்ற தலைமகன், ஒருவரும் அறியாத படி தலைமகளை உடன்போக்கில் அழைத்துச் செல்லுங்கால், அவளுடைய சுற்றத்தார் இடைச்சுரத்திடையெய்தி அவ்விரு வரையுந் தடுத்து நிறுத்த முயலுவர். அவரது வருகையைக் கண்டு அஞ்சிய தலைமகள், தன்னுயிரினுஞ் சிறந்த தலைவனைப் பிரிதற்கு மனமின்றி நிற்பள். இந்நிலையினை இடைச்சுர மருங்கின் அவள் தமரெய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்களுள் எய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை என்பர் ஆசிரியர். தலைவியின் கற்பு நிலையைக் கண்ட சுற்றத்தார் அவ்விருவரும் மணந்து வாழும் நெறிமுறையினை வகுத்தமைப்பர்.