பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தொல்காப்பியம் நுதலியபொருள் அதற்குத்தக்க நல்லொழுக்கம், ஆள்வினைத் தன்மை, பருவம், வடிவம், வடிவ வனப்பினை வாயிலகக்கொண்டு நிகழும் அன்பு, உள்ளத்தை ஒருவழி நிறுத்துதல், எல்லாவுயிர்களிடத்தும் அருளுடையராதல், அறிவு, எக்காலத்தும் திருத்தகவிற்ருகிய உள்ளம் உடைமை என இப்பத்தும் ஒத்திருத்தல் வேண்டும் என்பர் ஆசிரியர். எனவே இவையெல்லாம் தலைவன் தலைவி இருவர்பாலும் அமையவேண்டிய ஒப்புமைக் குணங்களெனவும் இவைபற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவும் உணர்த்தினராயிற்று. பொருமை, கொடுமை, தம்மைப் பெரியராக வியத்தல்: புறங்கூறுதல், கடுஞ்சொற்கூறல், கடைப்பிடியின்றி நெகிழ்ந் திருக்கும் சோர்வு, சோம்பல், பிறப்பினுல் தம்மை உயர்ந்தாராக நினைத்தல், ஒருவர் ஒருவரைவிட இன்புறுவதாக நினைத் தல், நுண்ணுணர்வின்றி வரும் வெள்ளறிவு, மறதி, இன்னுரை யொப்பர் இன்னர் என்றெண்ணி ஒருவரையொருவர் விரும்புதல் என இங்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் தலைமக்கள் பால் இல்லா தொழிதல் வேண்டுமென விலக்குவர் பெரியோர். இக்குற்றங்கள் யாவும் இன்றித் தலைமகன்யால் மெய்ப்பாடு நிகழுமெனவும், தலைவன் பால் நிகழ்தற்குரிய மெய்ப்பாடுகள் இவையிவையென வரையறுத்துக் கூருது, அவன்பால் நிகழத்தகாதன இவையென இச்சூத்திரத்தால் ஆசிரியர் வரையறுத்துக் கூறினரெனவும் கருதுவர் பேராசிரியர். இங்குக் கூறப்பட்ட நல்ல நயத்தினையுடைய மெய்ப்பாடு களின் நுட்பமனைத்தும், கண்ணுலும், செவியாலும் திட்பமாக அறியவல்ல நுண்ணறிவுடைய பெருமக்களுக்கல்லது ஏனை யோர்க்கு ஆராய்ந்துணர்தற்கரியது என்பர் ஆசிரியர். மனத் தளவில் அமைந்த மெய்ப்பாட்டின் உட்பொருளைக் கண்ணுலும் செவியாலும் அறிந்துகொள்ளுதல் எவ்வாறெனின், ஒருவரது மனக்குறிப்பின்வழி அவர்தம் முகம் வேறுபடுதலும் மொழி வேறு