பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ić தொல்காப்பியம் காப்பிய மரபியலாகும். இவ்வியலில் l-முதல் 70-வரை அமைந்த நூற்பாக்கள் முற்கூறிய மரபினயே விரித்துரைப்பனவாம். இவற்றின் பின் 86-முதல் 90-வரையுள்ள நூற்பாக்களும் இம் மரபினையே தொடர்ந்து பேசுவன ஒன்றற்கொன்று நீங்காத தொடர்புடையனவாய் அமைந்த இச் சூத்திரங்களினிடையே, "நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்குரிய" என்பது முதல், 'அந்த ணுளர்க் கரசு வரைவின்றே” என்பது முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும் சிறிதுந் தொடர் பற்ற நிலையிற் பின் வந்தவரொருவரால் நுழைக்கப்பட்ட இடைச் செருகலாகும். இவை தொல்காப்பியனரால் இயற்றப்பட்டன அல்ல என்பது சிறிது நூற் பயிற்சியுடையார்க்குந் தெளிவாகத் தோன்றும். இவ்வாறே இவ்வியலிற் சேர்க்கப்பட்டனவாக ஐயுறு தற்குரியனவுஞ் சிலவுள. அவை எங்ங்னமாயினும் இங்கெடுத்துக் காட்டிய சூத்திரங்கள் தொல்காப்பியனர் கூறியன அல்ல என்பதே அறிஞர் பலரும் ஒருமித்துக்கூறும் முடியாகும். இதன் விரிவினைத் தொல்காப்பியம் நுதலிய பொருள் என்னுந் தலைப்பிற் காண்க. இனி ஆசிரியர் தொல்காப்பியனுரது வரலாற்றினை ஆராய்வோம். தொல்காப்பியன் என்பது ஆசிரியரது இயற்பெயரே பண்டை நாளிற் காப்பியன் என்னும் இயற்பெயர் தமிழ் மக்களிடையே பெருக வழங்கியதென்பது வெள்ளுர்க்காப்பியன், பல்காப்பியன், காப்பியாற்றுக்காப்பியன் எனவரும் பெயர்களால் இனிது புலனும். ஓர் இயற்பெயருடையார் பலராயின் அவர் தம்முள் வேற்றுமை யறிய ஊரும் பண்பும் முதலிய ஏற்புடை