பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 17 யடைமொழிகளே இயைத்து ஒரு பெயராய் வழங்குதல் பண்டை யோர் மரபாகும். தொல்காப்பியன் என்னும் பெயரும் இம் முறையால் இடப்பெற்று வழங்கியதேயாகும். காப்பியன் என்னுஞ் சொல் பண்டைநாளில் இயற்பெயராக வழங்கினமை காப்பியஞ் சேத்தன் என வழங்கும் சங்கப் புலவர் பெயரால் நன்கு புலளும். காப்பியனுக்கு மகன் சேந்தன் என்ற பொருளிலேயே காப்பியஞ் சேந்தன் என்னும் இத்தொடர் வழங்கப்பெற்றுளது. ஆதன், பூதன் முதலிய இயற்பெயர்களுள் ஒன்று தந்தை யென்னும் முறையில் நிலைமொழியாக நிற்க, மக்கள் முறைப்பெயராகப் பிறிதொருபெயர் வருமொழியாய் வந்து புணரும்வழி, நிலை மொழி யியற்பெயரின் இறுதியிலுள்ள அன் கெட்டு அம் சாரியை வரும் என ஆசிரியர் தொல்காப்பியனர் கூறுவர். அவ்விதிப்படி காப்பியன் என்னும் இயற்பெயர் தந்தை பெயராக நிற்க, அதன் முன் மகன் முறைப் பெயராகச் சேந்தன் என்னும் பெயர் வந்து புணர, நிலைமொழி யியற்பெயராகிய காப்பியன் என்பதன் ஈற்றிலுள்ள அன் கெட்டு அம் சாரியை வந்தது. இப்புணர்ச்சி முறையை யுற்று நோக்குங்கால் காப்பியன் என்னுஞ்சொல் இயற்பெயரே என்பது நன்கு துணியப்படும். எனவே தொல் காப்பியன் என்பது ஆசிரியர்க்கு வழங்கிய இயற்பெயராதல் இனிது பெறப்படும். பனம்பாரளுரும் தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி எனப் பாயிரத்திற் கூறிப் போந்தார். தொல்காப்பியன் என வழங்குந் தனது பெயரையே தன்னல் இயற்றப்பெற்ற நூலுக்குந் தோற்றுவித்து என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். தொல்காப்பியன் என்னும் இயற்பெயருக்குப் பழமையான காப்பியக் குடியிற் பிறந்தோன் எனப் பிற்காலத்தவராகிய உரையாசிரியர்கள் பொருள் கூறினர்கள். வள்ளல்கள், புலவர்கள் முதலியவர்களின் இயற்பெயர்களால் அவர் தமக்கு உரிமையுடைய 1. தொல்காப்பியம், புள்ளி மயங்கியல், சூத்திரம் 33.