பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 217 குறளடி முதலாக அளவடியளவும் வஞ்சியுரிச்சீர் வந்து உறழும் நிலை இல.” அளவடியும் சிந்தடியும் வெண்பாவிற்கு உரியன; (அவை உரியவாதல்)தளேவகை ஒன்ருத் தன்மைக்கண் என்பர் ஆசிரியர்.” 'எனவே ஒன்றுந்தன்மைக்கண் நெடிலடியும் சில வருமென்று கொள்க'எனவும். தளைவகை ஒன்ருமையாவது நிலைமொழியும் வரு மொழியுமாகிய இயற்சீர் நேராயொன்றுவதும் நிரையா யொன்று வதுமன்றி மாறுபட வருவது; அவ்வழி நிரையீற்றியற்சீர் நிற்ப நேர்வரினும் நேரீற்றியற்சீர் நிற்ப நிரைவரினும் இயற்சீர் வெண்டளேயாம் எனவும், ஒன்றுந் தன்மையாவது வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்டளையாம் எனவும் இவ்விரண்டும் வெண்பாவிற்குத் தளையாம் எனவும் விளக்கங்கூறுவர் இளம்பூரணர். அளவடியின் மிக்க பதின்மூன்றெழுத்து முதலாக நெடி லடியுங் கழிநெடிலடியுமாகிய இருபதெழுத்தின் காறும் வரும் அடி கலிப்பாவிற்கு அடியாகும். வெண்பாவுரிச்சீர் நிற்ப நிரை முதல் வெண்சீர் வந்து நிரையாய்த் தளத்தல் கலியடிக்கு விலக்கத்தக்க தன்ரும்.* பிறவாகிய தளையும் (ஆசிரியத்தளையும் வெண்டளையும்) நீக்குதலில்லை" என்பர் ஆசிரியர். GಣTGaeg வந்து உறழக் கட்டளே கூறியது கண்ட மாணவன். நாற்சீரடி பெருத வஞ்சிப்பாவிற்குரிய குறளடி சிந்தடி என்பவற்றிலும் இவ்வாறு எழுத்தளவு பற்றிச் சீர்களே உறழ்ந்து காணுதலுண்டோ என வினவினுற்கு, அவை அங்ஙனம் உறழும் நிலையில’ என இச்சூத்திரத்தால் ஐயமகற்றினர் ஆசிரியர் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். 1. தொல்.செய்யுள்.34. 2. தொல்-செய்-55, 3. தொல்-செய்யுள்-56. 4. 3 * 多莎 57. 5 3 * 窗器 58.