பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 28i உறழ நூரும். அவற்றைக் குறி லகவற்றுங்கிசை வண்ணம் நெடி லகவற் றுங்கிசை வண்ணம் என ஒருசார் ஆசிரியர் பெயரிட்டுவழங்குப' என இளம்பூரணர் கூறும் விளக்கம் பிற்கால யாப்பிலக்கண மரபை அடியொற்றியமைந்ததாகும்.” "நான்கு பாவிளுேடும் இவற்றை வைத்து உறழவும், அவை மயங்கிய பொதுப்பா இரண்டிைேடு உறழவும் நூற்றிருபதாகலும் உயிர்மெய் வருக்கம் எல்லாவற்ருேடும் உறழ்ந்து பெருக்கின் எத்துணையும் பலவாகலும், இனிப் பிறவாற்ருற் சில பெயர் 1, "தூங்கேந் தடுக்கல் பிரிதல் மயங்கிசை வைத்துப் பின்னும் ஆங்கே ய கவ லொழுகிசை வன்மையு மென்மையுமா ஆங்கே குறில்நெடில் வல்லிசை மெல்லிசையோ டிடையும் தாங்கா துறழ்தரத் தாம்வண்ணம் நூறுந் தலைப்படுமே " என வரும் யாப்பருங் கலக் காரிகையும், "தூங்கிசை வண்ணம் ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம் மயங்கிசை வண்ணம், என இவ் வைந்தினேயும்; அகவல் வண்ணம், ஒழுகல் வண்ணம் வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், என்று இந் நான்கினேயும்; குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்து வண்ணம், வல்லெழுத்து வண்ணம், மெல்லெழுத்து வண்ணம், இடையெழுத்து வண்ணம் என இவ் வைந்தினையுங்கூட்டிக் குறில் கவற்றுாங்கிசை வண்ணம், நெடிலகவற்றுங்கிசை வண்ணம், வலியகவற்றுங்கிசை வண்ணம், மெலிய கவற்றுங்கிசை வண்ணம். இடையகவற்றுரங்கிசை வண்ணம், என்து இவ்வாறெல்லாம் உறழ்ந்துகொள்ள நூறு வண்ண விகற்பமாம்’ என வரும் யாப்பருங்கல விருத்தியுரையும் இங்கு நோக்கத் தக்கனவாம்.