பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தொல்காப்பியம் மனக் கருத்துக்களை முதன்முதல் உடற்குறிப்பிலுைம் ஒலிக் குறிப்பிலுைம் வெளியிட்டுப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பழகியதன் பயனகத் தம் உயிர் முயற்சியால் ஒலியுருவாகிய மொழியைப் படைத்துக் கொண்டனர் என்ப. தம் உள்ளக் கருத்துக்களைப் பிறர்க்கு உணர்த்த வேண்டுமென்னும் அவாவும் பிறருள்ளத்து உணர்ச்சிகளைத் தான் தெளிய உணரவேண்டு மென்னும் ஆர்வமும் ஆகிய இருவகைத் தூண்டுதல்களே ஒரு மொழியை யுருவாக்குதற்குரிய துணைக் கருவிகளாம். இவ்விரு வகைத் துண்டுதல்களும் நம் முன்னேருள்ளத்தில் தோன்ரு திருக்குமானல் நாம் மனனுணர்வில்லாத விலங்கு வாழ்க்கை யிலிருந்து விலகி மனனுணர்வுடைய உயர்திணை மக்களாய் வாழும் இவ்வுயர்வினை அடைந்திருத்தலியலாது. தாம் அறிந்த உண்மைகளைப் பிறர்க்கு எடுத்துணர்த்தலும் பிறர் உணர்த்திய உண்மைகளைத் தாம் உணர்தலும் ஆகிய இருவகைப் பயிற்சி யினலேயே மக்களது அறிவு படிப்படியாக வளர்ச்சிபெற்றுத் திகழ்கின்றது. அறிவு வளர்ச்சிக்குரிய இவ்விருவகைப் பயிற்சி யினையும், "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு” எனவருந் திருக்குறளில் ஆசிரியர் திருவள்ளுவளுர் அழகு பெறக் கூறியுள்ளார். தான் சொல்லக் கருதிய பொருள் பிறரால் உணர்தற்கரியன வாயினும் கேட்பார்க்கு எளிய பொருளாய் விளங்கும் வண்ணம் அவர் ம்னங்கொளச் சொல்லுதலும், பிறர்கூறுஞ் சொற்கள் நுண்பொருளையுடையன வாய் உணர்தற்கு அருமையுடையனவாயினும் அவற்றின் பொருளே உய்த்துணர்தலும் ஆகிய இருவகையாற்றலும் ஒருங்குடையதே அறிவு எனப்படும் என்பது மேற்காட்டிய குறளின் பொருளாகும். தாம் கூறுங் கருத்துக்களைப் பிறர் எளிதில் உணர்ந்துகொள்ளும் படி சொல்வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார்