பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு $7 அகத்தியர் மூன்று தமிழுக்கும் இலக்கணம் செய்தார் என்பதனைப் பண்டையுரையாசிரியர் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். “அகத்தியனராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும்" எனவும் தோன்று மொழிப்புலவரது பிண்டமென்ப" என்றதனுல் பிண்டத் தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டமுள தென்பது. அது முதனூலாகிய அகத்தியமே போலும்; என்ன? அஃது இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தையும் அடக்கி நிற்றலின்” எனவும் பேராசிரியரும், "அகத்தியம் இயற் றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கி நிற்றலின் அது பிண்டத்தினையடக்கிய வேருேர் பிண்டம்' என நச்சிஞர்க்கினியரும் கூறுதலால் அகத்தியம் என்பது முத் தமிழுக்கும் இலக்கணமென்பது பெறப்படும். 'நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன” என அடியார்க்குநல்லார் கூறுத லால் முத்தமிழிலக்கண நூலாகிய அகத்தியம் அவர் காலத்திற்கு முன்னரே இறந்தொழிந்தமை பெறப்படும். குறுமுனிவராகிய அகத்தியர்க்கு மாணவர் பன்னிருவரென்றும் அவருள் ஒருவராகிய சிகண்டியென்னும் அருந்தவ முனிவர், இடைச்சங்கத்தில் அநாகுலன் என்னும் பாண்டியன் மகளுகிய சாரகுமாரன் என்பான் இசையறிதற் பொருட்டு இசை நுணுக்கம் என்னும் இசைநூலை இயற்றினர் என்றும் ஒரு கதை வழங்குகின்றது. "தேவ இருடி யாகிய குறுமுனியாற் கேட்ட மாளுக்கர் பன்னிருவருட் சிகண்டி யென்னும் அருந்தவமுனி, இடைச்சங்கத்து அநாகுலனென்னுந் தெய்வப் பாண்டியன்....... குமரன் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கமும்” எனவரும் அடியார்க்குநல்லார் கூற்று இக்கதை யினைத் தழுவி யெழுந்ததாகும். இடைச்சங்க காலத்தவளுகிய பாண்டியன அநாகுலனென்னுந் தெய்வப் பாண்டியனென்றும், அவன் தேரொடு விசும்பிற் செல்லுங்கால் திலோத்தமை யென்னுந் தெய்வமகளைக் கண்டு கூடிப் பெற்றமையால் அவன்