பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 தொல்காப்பியம் என ஒன்பதாம் புறப்பாடலிற் பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதி வாழ்த்தப் பெறுகின்ருன். இத்தொடரில் முந்நீர் விழ வின் நெடியோன் எனப் போற்றப்பெற்றவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியனே என்பது புறநானூற்றுரையாசிரியர் கருத்தாகும். 'முந்நீர்க்கண் வடிம்பலம்ப நின்ருன் என்ற வியப்பால் நெடி யோன் என்ருர் என்ப' என அவ்வாசிரியர் தமக்கு முன்னேர் கருத்தாகக் கூறுதலால், புறநானூற் றுரையாசிரியர்க்கு முன் னுள்ள சான்றேரும் இங்ங்னமே கருதினர்கள் என்பது பெறப் படும். எனவே வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்பான் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குக் காலத்தால் முற்பட்டவ னென்பதும், முந்நீர் விழவின் நெடியோன் என்ற பெயருடைய வன் என்பதும் முன்னையோர் கருத்தாதல் நன்கு புலனுகும் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பின்னரும் நெடியோன் என்ற பெயருடைய பான்டியளுெருவன் இருந்தான் என்பது மதுரைக்காஞ்சியாற் புலனுகின்றது. பல்யாகசாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறையோகிய தொல்லாணை நல்லாசிரியர் புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பும் நிலந்தந்த பேருதவியும் இந் நெடியோனுக்கு உளவாக மாங்குடி மருதஞர் கூறுகின்ருர். நெட்டிமையார், முதுகுடுமிப் பெருவழுதியின் வாழ்நாள் அளவுக்குப் பஃறுளியாற்றின் மணலை உவமை கூறி வாழ்த்தி புள்ளார். அதனுல் இப்புலவர் பஃறுளியறுள்ள காலத்தில் வாழ்ந்தவரெனவும் ஆசிரியர் தொல்காப்பியஞர்க்குக் காலத்தால் முற்பட்டவரெனவும் கருதுவாரும் உளர். வியங்கோள் வினைச் சொல் முன்னிலை தன்மை என்னும் இரண்டிடத்தும் நிலைபெரு தென்பதனை முன்னிலே தன்மை ஆயிரிடத்தொடும், மன்னதாகும் வியங்கோட் கிளவி என்ற சூத்திரத்தால் தொல்காப்பியர்ை குறித்துள்ளார். இவ்விதிக்கு மாருக எங்கோ வாழிய குடுமி' என வியங்கோள் வினைச்சொல் நெட்டிமையார் பாடலிற் பயின்று வரக் காண்கின்ருேம். ஆவோடல்லது யகரமுதலாது' என்ற தொல்காப்பிய விதிக்கு மாருக யூபம் நட்ட வியன்களம்