பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தொல்காப்பியம் வழக்குஞ் செய்யுளும் ஆராயும் பேரவையினை நிறுவிப்போற்றி வந்தார்கள். இங்ங்ணம் பாண்டியர் முதலிய பண்டைத் தமிழ் வேந்தர்களால் தோற்றுவிக்கப்பெற்ற அவையமே பிற்காலத்தில் சங்கம் என்ற பெயரால் வழங்கப்பெறுவதாயிற்று. இதன் முன்னுள்ளோர் கூடல், தொகை என்ற பெயர்களாலும் வழங்கி யுள்ளார்கள். தாய்மொழி வாயிலாக எல்லாக் கலைகளையும் வளர்க்குங் கருத்துடன் புலவர் பேரவையைக் கூட்டி அறிவு நூல் களே வெளியிடும் முறை, மக்கள் நல்வாழ்வினைப் போற்றும் நாகரிக வளர்ச்சிக்கு அரண் செய்வதாகும். இங்ங்ணம் கூர்த்த நல்லறிவினல் சீர்த்த நாகரிகத்தை வளர்க்கும் கல்வித் தொண் டினப் பண்டைப் பாண்டியர்கள் தம் குலப் பணியாகக் கொண் டிருந்தார்கள் என்பது, களவியலுரையிற் கூறப்படும் முதல், இடை, கடையென்னும் முன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாற்ருல் நன்கு விளங்கும். அவையம் என்பதே சங்கத்தைக் குறித்து வழங்கிய பழைய தமிழ்ப் பெயராகும். தலைச்சங்கத்து இறுதியில் நிகழ்ந்த கடல்கோளால் பாண்டி யர் ஆட்சிக்கு உட்பட்ட பஃறுளியாறுமுதல் குமரிமலை யீருக வுள்ள பெருநிலப்பகுதி கடலுள் மூழ்கியதென்றும், அதனையாண்ட தென்னவன், தான் தென்னுட்டில் இழந்த நிலத்திற்கு ஈடாக வடநாட்டிற் கங்கை முதல் இமயம்வரையுள்ள பெருநிலப் பகுதியை வென்று தன் நாட்டுக் குடிகள் வாழத் தந்து நிலந்தரு திருவிற் பாண்டியன் எனச் சிறப்பிக்கப் பெற்ருனென்று முன் னர்க் கண்டோம். கல்வியாலும் வீரத்தாலும் கெர்டைத் திறத் தாலும் புகழ்ச் செயலாலும் மேம்பட்டு விளங்கிய இவ்வேந்தர் பெருமான், தன் குடிமக்கள் யாவரும் தமிழர்க்குரிய பெருமிதப் பண்புகள் யாவும் ஒருங்கே பெற்றுத் திகழவேண்டுமெனக் கருதினன். தன்னுட்டில் நேர்ந்த கடல்கோளால் அழிந்து மறைந்த பேரறிவு நிதியமாகிய நூற்செல்வத்தை யெல்லாம் தேடித் தொகுக்க முயன்றன். ஆயுந்தொறும் தொறும் இனிதா ந்