பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஒரு நாட்டின் வரலாற்றை அறிவதற்குரிய சான்று கள் எனக் கருதப்படுவன. இலக்கியம், கல்வெட்டு, கட்டிடங்கள், நாணயங்கள். உள் நாட்டாரும் வெளி நாட்டாரும் எழுதி வைத்த குறிப்புகள் முதலியனவாம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டுள்ள தமிழக நிலையை அறிவதற்குத் துணையாகக் கிடைத் துள்ளது இலக்கியம் ஒன்றேயாகும். ஆகவே தமிழ் இலக்கிய வரலாற்றை அறிய வேண்டியது இன்றியமை யாதது ஆகும். தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல் களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆதலின் தொல் காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எம்மொழியிலும் இலக்கியம் தோன்றி வளர்ந்த பின்னரே இலக்கணம் தோன்றும், இதற்குத் தமிழ்மொழியும் புறம்பன்று. தமிழிலும் இலக்கியங் கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றி யுள்ளன. தொல்காப்பியமும், இலக்கியங்கள். மட்டு மன்றி இலக்கணங்களும் பல தோன்றிய பின்னரே இயற்றப்பட்டுள்ளது என்பதைத் தொல்காப்பியமே தெற்றெனப் புலப்படுத்துகின்றது. ஆதலின் தொல் காப்பியம் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முற்பட்டதேயன்றி, அதுதான் தமிழின் முதல் நூல் என்று கருதிவிடுதல் கூடாது. தமிழிலக்கியக்கடலின் காலம்எனும் கரையை எய்துவதற்குத் தொல்காப்பியரும் திருவள்ளுவருமே கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கின்றனர். இவ்விரு வரின் - காலங்களை வரையறை செய்து தெரிதல்