பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 117 துக்கூறின் கற்போர்க்குத் தெளிவு தோன்றாது. ஆகவே அதனைத் தமிழில் வழங்குதல் குற்றமின்று. ஆனால் வேற்று மொழிச் சொல் தமிழோசைக்கு மாறுபட்டு இருப்பின் தமிழோசை யூட்டியே சொல் லுதல் வேண்டும். அவ்வாறு சொல்வதனால் அச்சொல் வடிவில் சிதைந்தாலும் குற்றமின்று. ' விபீஷணன்- வீடணன்' என வருதலும், 'கர்ணன்-கன்னன்' என வருதலும் காண்க. சிதைந்தன வரினும் இயைந்தன் வரையார்என ஆசிரியர் தொல்காப்பியர் ஆணை தந்துள்ளமை அறிக. வேற்று மொழிப் பெயர்ச் சொல்லைக் கொள்ள வேண்டிய இன்றியமையாத நிலை ஏற்படின் கொள்ள லாம் என்றும், கொள்ளுங்கால் தமிழோசையூட்டியே கொள்ளல் வேண்டுமென்றும் ஆசிரியர் கூறியிருப் பதை அறியாது வரையறையின்றி வேற்று மொழிச் சொற்களை அம்மொழிகளில் உள்ளவாறே தமிழில் எடுத்தாளத் தொடங்குவது தமிழுக்கு அழிவு தேடித் தருவதாகும்; தொல்காப்பியர் கொள்கைக்கு மாறு பட்டதாகும்; மொழி நூலுக்கும் முரண் பட்டதாகும். செய்யுட்குரிய சொற்கள் வலித்தல், மெலித்தல், விரித்தல், தொகுத்தல், நீட்டல், குறுக்கல் வேறு பாடுகளை அடைந்தும் வரும். சொற்கள் செய்யுளில் நிற்குங்கால் நிரல் நிறை, சுண்ணம், அடிமறி, மொழி மாற்று என்று சொல்லப்படும் முறையில் நின்று பொருள் தரும். வழக்கினுள் ஒரு சொல்லை ஒரு முறைக்கு மேல் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு. அவ்வாறு கூறுதலை ஒரு சொல்லடுக்கு என்பர் ஆசிரியர். இவ் வாறு அடுக்கி வரும் இடங்கள் இசை நிறை, அசை