பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அகத்திணை இயல் தமிழ் நூலார் இலக்கியங்களை அகம் என்றும் புறம் என்றும் இருவகையாகப் பிரித்தனர். ஆங்கில நூலார் பிரித்துள்ள தன்னைப் பற்றியன (Subjective Poems), பிறரை- பிறவற்றைப் பற்றியன (Objective Poems) என்ற பிரிவினோடு அகம், புறம் என்பன ஒரு வகையில் ஒத்திருப்பதைக் காணலாம். அகம் சிறப் பாகத் தன்னைக் குறியாது போயினும், புறம் பிறரையும் - பிறவற்றையும் குறிக்கும். ஆனால் பழந்தமிழர் 'அகம்' காதல் பற்றியும், 'புறம்' காதலின் தொடர்பாக விளையும் பிறவற்றையும் குறிக்கும் எனப் பொருள் கொண்டு அவ்வகை யிலேயே இலக்கியங்களைப் படைத்துள்ளனர். காதலே உலகத்தின் உயிர் என்று கூறலாம். உலகப் பெருக்கத்திற்கும் வளத்திற்கும் காதல்தான் அடிப்படை. காதலின்றேல் சாதல் என்பது காதலர்க்கு மட்டுமன்று; எல்லார்க்கும் பொருந்தும். காதலை இலக்கிய ஊற்று என்றும் கூறலாம். உலக இலக்கியங்களை ஆராய்ந்தால் காதல் அடிப்படையில் தோன்றியுள்ள இலக்கியங்கள் எண்ணற்றனவாய் இருப்பதை எளிதில் தெளியலாகும். காதல் என்பது நாகரிகப் பண்பாட்டின் அளவு தெரிவிக்கும் உரைகல் என்றும் உரைக்கலாகும். சாதி மத நிலை வேறுபாடற்ற மக்களின் வாழ்வின் நிலைக் 9-1454