பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தொல்காப்பிய ஆராய்ச்சி இயற்கையை ஒட்டி இயற்றப் இலக்கியம். ஆதலின் இவை மூன்று தெளிவுறத் தெரிதல் இன்றியமையாதது. படுவதே பற்றியும் பாடல்களுள் மக்களைப் பற்றியும் குறிப்பிட நேரிடும். மக்களைக் குறிப்பிடுங்கால் அவர்கள் பெயர் களைப் பற்றிச் சில மரபுகளும் உண்டு. அகப் பொருட் பாடல்களுள் இயற்பெயர் கூறப்படுதல் கூடாது. புறப் பொருள் பாடல்களுள் கூறலாம். அகத்திணையுட் புறப் பொருள் கலந்து வருமேல் அப்புறப் பொருளுள் ஒருவரியற் பெயர் சுட்டிக் கூறப்படலாம்.1 அகப் பொருளுள் பயிலக் கூடிய பெயர்களை திணைதொறும் மரீஇய பெயர் என்றும், திணை நிலைப் பெயர் என்றும், இருவகையாகக் கூறுவர். அவை பெயர்ப் பெயராகவும் இருக்கலாம்; வினை (தொழில்)ப் பெயராகவும் இருக்கலாம். திணைதொறும் மரீஇய பெயராவன வேட்டுவர், குறவர், ஆயர், உழவர் முதலியன. திணை நிலைப் பெயர்களை உரிப் பொருட் பெயர் கள் என்றும் கூறுவர். அவை வெற்பன், அண்ணல், உழவன் முதலியன. பாடல்களுள் தலைமக்களாக வருவோர் எல்லா வகையாலும் சிறப்புடையராகவே இருத்தல் வேண்டும். உரிமை வாழ்க்கையுடையராய் மேம் 1. "மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் சுட்டி யொருவர் பெயர் கொளப் பெறாஅர். தொல்; பொருள் சூ.54. "புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது அகத்தினை மருங்கின் அளவுத லிலவே - தொல் : பொருள் சூ. 55