பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 167 ஆடவன் என்பதை அறியாதவள்போல் இருக்கும் இயல்பு ஒருவன் தன்னைக் காதலிக்கின்றான் அறிந்தாலும் அறியாதாள் போன்று நடித்து உண்மை நிலையறிய முற்படுதலேயாகும். இவ்வியல்பு களுக்கு மாறாகத் தன் காதலை வெளிப்படையாக உரைக்கும் நிலையில் திரைக்காட்சிகளிலும் சில நாடக நூல்களிலும் பெண்களை அமைப்பது தமிழ் மரபுக்கு ஒவ்வாததாகும். நங்கையரினத்தை இழிவுபடுத்துத லாகும். குறிப்பால் தம் கருத்தை வெளிப்படுத்திக் கொண்ட காதலர்கள் தம் காதல் நிறைவேறப் பலவகையாலும் முயல்வர். ஒருமுறை சந்தித்த காதலர்கள் மீண்டும் மீண்டும் சந்திக்க முயலல் இயல்பே. முதல் முறை சந்தித்த இடத்திலேயே மறுமுறையும் சந்திக்க நினைந்துவந்து எதிர்ப்பட்டுக் காணலும் இயலும். இவ்வாறு நிகழ்வதை இடந்தலைப்பாடு என்பர். பின்னர்க் காதலன் காதலி நினைவாகவே இருப்பான். காதலியும் காதலன் நினைவாகவே இருப்பாள். தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் விரும்புதலும் நினைத்தலுமே தொழிலாகப் பிறிது தொழிலின்றி இருக்குங்கால் இருவரும் உடல் மெலிந்து காணப்படுவர். இருவரும் தம்மை மறந்து மற்றவர் நினைவாகவே இருந்து வருந்துங்கால் தமக்குத் தம் காதலர் கூட்டத்தால் உண்டாகப்போகும் நன்மையைச் சொல்லிக் கொள்ளுதலும் நிகழும். காதலர் பிரிவை ஆற்றும் துணையும் பொறுத்திருந்து ஆற்றமுடியாத நிலைமை வரும்பொழுது தமக்கு நெருங்கிய நட்பினரானவரிடம் வாய்விட்டுக் கூறிவிடுதலும் உண்டு. தலைவன் தன் தோழனிடமும், தலைவி தன் தோழியிடமும் கூறுதல் கூடும். எங்கு நோக்கினும் தம் அன்பர் தோற்றமே