பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 183 வேண்டுமென்று விதித்தனர் தமிழ்நாட்டு மேலோர் என்பதே இந்நூற்பாவின் நேர்பொருள். இனி யார்யார் எவ்வெவ்விடத்தில் எவ்வெப் பொழுதில் கூற்று நிகழ்த்துதற்குரியவர் என்பதனை ஒழுங்குபடத் தொகுத்துரைக்கும் அழகு போற்று தற்குரியது. கற்பில் கூற்று நிகழ்த்துவதற்குரியோர் தலைவன், தலைவி, பாங்கன். தோழி, செவிலி. பார்ப்பான், பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர், காமக்கிழத்தியர் முதலியோர் ஆவர். நிகழ்ச்சியிடங்கள் தலைவன் கூறுதற்குரிய முப்பத்துமூன்றைத் தொகுத்து உரைத்துள்ளார். முதலில் கூறப்படுவது, 'கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் " என்பதாகும். இதன்பொருள்:- காதலன் காதலி யோடு பகற்குறியிலும் இரவுக்குறியிலும் கூடிப் பழகி வந்தான். இருவர்க்கும் உள்ளத்தால் கூட்டம் உண்டேயொழிய உடலால் கூட்டம் இல்லை. மணந்த பின்னரே உடற்கூட்டம் கொள்ளல் வேண்டும் என்று கருதிய உறுதியோடு இருவரும் பழகி வந்தனர். இவர்கள் காதல் அம்பலாகிப் பின் அலராகியும் விட்டது. தலைவி இற்செறிக்கப்பட்டுவிட்டாள். இருவரும் கண்டு பேசுதலும் நிகழவில்லை. பின்னர்த் திருமண முயற்சியில் ஈடுபட்டுத் திருமணம் நிகழச் சில நாட்களோ, வாரங்களோ மாதங்களோ கழிந் திருக்கலாம், தலைவனும் தலைவியும் உள்ள உறுதிப் பாட்டோடு இருந்திருப்பார்கள். திருமணமும் நிகழ்ந் தேறியது. இருவரும் முதல் இரவில் கூடுகின்றனர். நெஞ்சுறுதி தளர்கின்றது. இருவரும் கூடி. மகிழ்கின்றனர்.