பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தொல்காப்பிய ஆராய்ச்சி வேண்டினார். பிறந்ததனால் பயன் என்ன? சிறந்தன வற்றைச் செய்து முடித்தலே. 'காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே காதல் நிறைந்த வாழ்விற்குக் கடையாணி போன்ற மனைவியைக் கொண்ட காலத்தில் இன்பமும் துணையும் பொருந்திய மக்களொடு நிறைந்து அறமே செய்கின்ற சுற்றம் சூழத் தலைவனும் தலைவியும் சிறந்த செயல்களைச் செய்தலே இறந்ததன் பயனாகக் கொள்ளத்தகும். இவ்வாறு நேர் பொருள் காணுவதை விடுத்து நச்சினார்க்கினியர் வடமொழி நூற்பொருளை நச்சி நூற்பாவின் சொற்கோப்பைச் சிதைத்து உளம் போனவாறு உரைகளைக் கூறித் தமிழர் வாழ்வியல் நெறியை மறைத்து வடவர் வாழ்வு முறையே தயி ழர்க்கும் என நிலைநாட்டித் தம் வடமொழிப் புல மையை வையம் அறிந்து மகிழ வகை செய்து விட் டார். உரையாசிரியர்களின் உரைகளை ஓர்ந்து உண்மை தெளிதலே கற்போர் கடனாகும்.