பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 199 4. பொருளியல் 'பொருள் அதிகாரம்' இலக்கியம் இயற்றுவதற்கு வழிகாட்டும் இலக்கணமாகும் (Science of Literature) என்பதை இவ்வியல் நன்கு விளம்புகின்றது. பொருள் அதிகாரம் முழுதும் பொருளைப்பற்றியே கூறுவதாய் இருந்தும் இவ்வியலுக்கு மட்டும் பொருளியல் என்று பெயரிடுவானேன்? இவ்வினாவை நச்சினார்க்கினியர் எழுப்பி அதற்கு விடை கூறுகின்றார். 'சொல்லதிகாரத்தில் கூறிய சொற்களை மரபியலின் இருதிணை ஐம்பால் இயல் நெறி வழாமைத் திரியில் சொல் என்பாராதலின் அவை ஈண்டுத் தம் பொருளை வேறுபட்டுரைப்பி னும் பொருளாகுமெனவும் இப்பொருளதிகாரத்து முன்னர்க் கூறிய பொருள்களில் பிறழ்ந்திசைப்பன வும் பொருளாமெனவும் அமைத்துச் சொல்லுணர்த் தும் பொருளும் தொடர் மொழியுணர்த்தும் பொரு ளும் ஒருங்கே கூறலின் பொருளியல் என்றார்." உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவதும் அறியச் செய்வதும் மொழி. வாழ்க்கை நுகர்ச்சியை வெளிப் படுத்துவதும் பிறர் அறியச் செய்வதும் இலக்கியம். (Literature exists not only in expressing a thing; it equally exists in the receiving of a thing expressed - Abercrombie - Principles of Literary criticism - page 23) புலவன்