பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தொல்காப்பிய ஆராய்ச்சி ஒருவன் தான் நுகர்ந்ததை நுகர்ந்தவாறு பிறர் அறிகின்றவகையில் சொல்லோவியப்படுத்தல் வேண்டும். சொல்லோவியப்படுத்துதற்கு இலக்கணத்திற்கு ஏற்பச் சொற்றொடர்களை அமைத்து, யாப்பிலக்கணத்திற் பொருந்த சீர்களைப் பொருத்திவிடும் ஆற்றல் மட்டும் பெற்றிருந்தால் சாலாது. வழக்கு (உரையாடும் மொழி- கருத்து அறிவிக்கும் மொழி) மொழி வேறு; செய்யுள் (இலக்கிய மொழி) மொழி வேறு. செய்யுள் மொழி எண்ணுவதை அறிவித்தலோடு நின்றுவிடுதல் கூடாது. எண்ணத்தைச் சூழும் உணர்ச்சி, புலன் நுகர்ச்சி, உள்ளுநிலை முதலிய பிறவற்றையும் கற்போர் உள்ளத்தில் தோற்றுவித்தல் வேண்டும். புலவன் தான் எண்ணுவதை அப்படியே நூலைக் கற்போர் உள்ளத்திலும் தோற்றுவித்தல் வேண்டும். அதற்குத் துணையாகச் சொற்கள் அகராதி அறிவிக் கும் பொருள்களை மட்டும் அறிவித்தலின்றி கற்பனையைத் தோற்றுவிக்கும் ஆற்றலையும் பெற்றி ருத்தல் வேண்டும். அவ்வாறு பெறுவதற்குச் சொற்கள் அவைகள் அமைவுறும் சொற்கோப்பினால் வேறு பொருள்களையும் சுட்டுதல் வேண்டும். அவ் வாறு சுட்டுங்கால் எவரும் அறிந்துள்ள இலக்கண விதிகளைக் கடந்தும் சொற்கள் பொருள் விளக்கம் தரும்; நேர் பொருள் மட்டுமன்றி, வேறு பொருளும் தரும். கற்பனையைத் தூண்டும் வகையில் அவை அமைந்து செய்யுள் நலத்தைப் பெருக்கும். (Every individually significant word may have independent of its grammatical force, a peculiar value for imagination derived from its context - Abercrombie - page 40.) இவை பற்றியெல்லாம் இவ்வியலில் ஆசிரியர் தொல்காப்பியர் விளக்குகின்றார்.