பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 201 முதல் நூற்பாவில் கூறுகின்றார்:- சொற்கள் இயல்பாகவுள்ள தத்தம் பொருள்களை அறிவியாமல் வேறு பொருள்களை நிகழ்விடத்திற்கேற்ப அறிவித்தா லும் அவைகட்குள்ள பொருள்கள் என்றே கருதுதல் வேண்டும். பொருள் வேறுபட்டிருந்தால் சொல் அசை வேறுபட்டுவிடாது. சொல் வடிவில் அவ்வாறுதான் இருக்கும். ஆனால் பொருள் மட்டும் யாரும் இயல்பாக அறியும் பொருளினும் வேறுபட்டி ருக்கும். ஆபர் குரோம்பி தமது 'இலக்கிய ஆராய்ச்சிக் கொள்கைகள்" என்னும் நூலில் கூறி யுள்ளவாறு தொல்காப்பியர் கூறியிருப்பது மிகமிகப் போற்றற்குரியது அன்றோ? அந்நூற்பா வருமாறு: 'இசைதிரிந்து இசைப்பினும் இயையும் மன்பொருளே அசைதிரிந்து இயலா என்மனார் புலவர். " காதல் பற்றிக் கூறுவது என்றால் இன்ப நிலையும் உண்டு. துன்ப நிலையும் உண்டு; இரண்டு நிலைகளி லும் நெஞ்சை நோக்கிக் கூறுவது போன்று உரைக் கும் ஆற்றலில்லா உயிருள்ளனவும் உயிரில்லாதன வும் உரைப்பன போன்றும், கேட்கும் ஆற்றலில்லா அவை கேட்பன போன்றும், உறுப்பற்றனவும் உணர்வற்றனவும் அவை பெற்றிருப்பன போன்றும், செய்யும் ஆற்றல் அற்றனவற்றைச் செய்வன போன்றும், அறிவு வேறாகவும், புலன் வேறாகவும் தெரிதற்படும் முறையில் நிறுத்தி எட்டு வகை மெய்ப் பாடுகளும் தோன்ற உயர்திணைக்குரிய ஆண்பால், பெண்பால், பலர்பால் மூன்றையும், அஃறிணை இருயியலிலும் தோன்றக் காதலர்கள் கூறுதல் இலக்கியத்திற்கு உரியதாகும். ஒரு தலைவன் கூறுகின்றான்:- இனிய சொற்களை உடைய என் தலைவியைக் கூடச் சென்ற என் நெஞ்சு, கைகளைக் கவிழ்த்துக்