பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 203 அஃறிணையை உயர்திணையாக்கிக் கூறும் கற்பனை முறைமை தோழி, செவிலி, நற்றாய், பாங்கன் என்னும் நால்வர்க்கும் உரித்தாம். உயிர்,நாண்,அறிந்தும் அறியாது போலிருக்கும் இயல்பு (மடன்) எனும் மூன்றையும் அடிப்படையாக வைத்துக் கூற்றுகள் நிகழும். இக்கூற்றுகள் நற்றாய். செவிலி, தோழி, தலைவன் எனும் நால்வர்க்கும் உரிய என்பர். இவை தலைவிக்குக் கெடாமல் காத்தல் இவர் கடமையாகும். காதலால் தலைவி உயிரை இழத்தலோ,நாணை விடுதலோ, மடன் அகற்றலோ நிகழ்ந்து விடாதவாறு அறத்தோடு நின்று காத்தல் வேண்டும் என்பதாம். தலைவியின் காதலைப் பெற்றோர்க்கு அறிவித்து உரியவனை மணக்குமாறு செய்தலை அறத்தொடு நிற்றல் என்று அழைப்பர். காதல் வயப்பட்டு வாடும் தலைவியின் மேனியில் பசப்பு எனப்படும் நிற மாற்றம் தோன்றுவதுண்டு. அதனால் வாடுங்காலத்துத் தன் உறுப்புக்கள் உணர்வு பெற்றுள்ளனபோல் உருவகப்படுத்திக் கூறுவதுண்டு. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவை என்னைத் தின்னும் அவர்க்காண லுற்று " (குறள் 1244) ஏ ! நெஞ்சே ! நீ தலைவரிடம் செல்லும்போது கண் களையும் உடன் கொண்டு செல். இல்லையேல் அவரைக் கண்ட அவைகள் மீண்டும் காணல் வேண்டும் என்று விரும்பி என்னை வாட்டுகின்றன. திருவள்ளுவர் நெஞ்சொடு கிளத்தல்" என்று ஒரு இயல் வைத்திருப்பது நோக்கத் தக்கது. நெஞ் சொடு கூறுவனவாக அமைந்துள்ள குறட்பாக்கள் இலக்கியச் சுவை மிகுந்தன எனக் கூறலும் மிகையன்றோ?