பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் n 207 "" ஏற்படுங்கால் தலைவி வருந்துவாள். திருமணம் செய்து கொள்ளாது காலத்தைக் கடத்துதல் ஏன் என்று வருந்துங் காலத்துத் தோழி, பொருள் வேண்டிச் சென்றுளான் விரைவில் வருவான் என்று கூறலும் உண்டு. காப்புக்காலத்து அன்பு, அறன், இன்பம், நாண், முதலியன நீங்கி ஒழுகினாற் போல புலனெறி வழக்கம் செய்தலும் உண்டு. உலக வழக்கிற்குப் பொருத்தமில்லாதன அகப் பொருளை விளக்க வருமாயின் புலனெறிக்கு ஏற்றதாகக் கொள்ளுதலால் குற்றமின்று. அன்புரிமையைக் காட்டும் பொதுச் சொல்லாக 'எல்லா' என்பது பயின்று வந்துள்ளது. தலைவியும் தோழியும் வேறு பாடற்றவர்களாய் ஒழுகுவர். இவ்வாறு ஒழுகுவதால் அவர்களின் கூற்றுக்கள் யாவருடையன என்று அறியமுடியாமல் அமைதலும் உண்டு. தலைவி தோழியைப் போலவும், தோழி தலைவியைப் போலவும் கூறுதல் உண்டு. ஆண்பாலுக்குக் கூறியது பெண்பாலுக்கும், பெண்பாலுக்குக் கூறியது ஆண்பாலுக்கும் பொருந் துவது வழக்காகும். இன்பம் என்பது யாது? தான் விரும்பியதைப் பெற்று மகிழ்தலே. காதலின்பத் திற்கு மிகமிக வேண்டப்படுவது விரும்பியவரை மணத்தலே. ஆதலின் ஆசிரியர், என்றார். "எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும் " மக்களுக்கு மட்டுமின்றி உயிர்கள் எனப்பொதுப் படக் கூறினார். பிற உயிர்கள் விரும்பியவாறு கூடி மகிழ்கின்றன. நாகரிகமிக்க மக்கள் உலகில் மட்டும் அவ்வாறு விரும்பியவரைக் கூட முடியாது. இடர்ப் படும் நிலை ஏற்படுகின்றது. இவ்வேறு பாட்டைச்