பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 219- நெடுமொழி"யாவது உயர்த்திக் கூறும் மொழி. நெடிது நிலைத்திருக்கும் புகழ் மொழியாகும். நாட்டுக் காக உயிரையும் கொடுக்கவிருக்கும் போர் வீரர்க்கு இச் சிறப்புச் செய்யும் நாகரிக வழக்கு நம் முன்னோ ரும் கொண்டிருந்தனர். பிண்டம் மேய பெருஞ் சோற்று நிலை: அரசன், படை வீரர்கட்குப் பெருவிருந்தளித்து, அவ்விருந்தில் தானும் கலந்து கொள்வதாகும். இக்காலத்தில் அரசர்க்கு மதிப்பில்லைதான். பல நாடுகளில் அரசர் மரபே அழிந்துவிட்டது. உள்ள நாடுகளிலும் அரச ரும் பொதுமக்களோடு பொதுமக்களாகக் கலந்து விட்டார். அன்று அப்படியன்று. அரசரே காணும் கடவுள். அரசரைக் கண்டால் கடவுளைக் காண்ப தற்கு ஒப்பாகும் என்று கருதியிருந்தனர். அவ்வரசரே தம்முடன் உண்ணவும் தமக்கு உணவு வழங்கவும் வருவாரேயானால் அச்சிறப்பினைப் பெறும் வீரர்கள்தாம் பிறவி பெற்றதன் பயனைப் பெற்று விட்டதாகத் தானே கருதுவார்கள். உயிர் வழங்கி, நாட்டின் நல் மானம் காக்க நாளும் முன்வராது என் செய்வர்? அழிபடை தட்டோர் தழிஞ்சி : பிறர் புகழும் வகையில் போர் செய்து மடிந்துபோன போர் வீரர்கட்கு அவர்கள் இவ்வுலகைவிட்டு மறைந்த பிறகும் பட்டங் கள் வழங்கியும் பரிசுகள் அளித்தும் சிறப்பிக்கும் வழக்கம் இன்று நடை முறையில் இருக்கக் காண்கின் றோம். இம்முறை அன்றும் இருந்துள்ளது. இவ்வாறு இறந்த பின்னர் சிறப்புச் செய்வதைத் தழிஞ்சி என்று அழைத்தனர். போரிற் பொருது மடிந்தாலும் மடியாது உறுப்புக் குறையுற்றே. உடலில் விழுப்புண்பட்டோ பிழைத்திருந்தாலும், அரசர்களால் சிறப்புச் செய்யப் பெறுவர்.