பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தொல்காப்பிய ஆராய்ச்சி 6. பாலறி மரபின் பொருநர் கண்ணும் 7. .. அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையில் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர். இந்நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர் வட நூல் களைத் தழுவி உரைத்துத் தமிழர்க்குப் பொருந்தா வாழ்வினைத் தம் புலமை நுட்பத்தால் பொருந்தச் செய்ய முயன்றுள்ளார். "தமிழ் மரபு கருதாது வடநூல் கூறும் வருண வேறுபாடுகளை அவரவர்க்கு அறுதியிட்டு வகுத்த தொழில் தொகுதியுடன் இங்குக் குறிப்பன போலக் கொண்டு பொருந்தாப் பொருள் கூறி இடர்ப்படுதலை எடுத்துக் காட்டி நாவலர் பாரதியார் அவர்கள் தமிழ் மரபுக்கேற்ற விளக்க வுரை கூறியுள்ளார்கள். (தொல்காப்பியர் பொருட் படலம் - புறத்திணையியல் உரை-பக்கம் 100 -106.) வாகையென்பது தாம் கொண்டுள்ள வாழ்வியற் குறிக்கோளில் வெற்றிபெறுதல் என்று குறிப்பிட் டோம். அவ்வாறு வெற்றி பெறுகின்றவர்கள் யாவர் என்று தெரிய வேண்டும். அக்கால மக்களி டையே வருண வேறுபாடு கிடையாது. தொழில் வகையால் பிரிவுகள் இருந்திருக்கலாம். எல்லா நாட்டிலும் உண்டு. எக்காலத்திலும் இருக்கும். பண்டைத் தமிழகத்திலும் பிரிவுகள் தொழில் வகை யால் இருந்தன. நூல்களை ஆராய்கின்ற பார்ப்பார், நாட்டை ஆளு கின்ற அரசர், நான்கு திணைக்குமுரிய ஆயர், வேட்டு வர், உழவர், பரதவர், ஒரு திணைக்கென உரிமை பெறாது எல்லாத்திணை நிலங்கட்கும் உரிய வினைவலர், ஏவலர், குற்றமில்லாச் செயல்களை இறப்பு, நிகழ்வு. எதிர்வு என்ற மூன்று காலங்களிலும் செவ்வனே நடைபெறச் செய்து வருகின்ற அறிவர்கள், எண்